Tag Archives: TAMIL CINEMA NEWS

இன்றைய பரபரப்பு செய்தி !

FlashNews-Logo

1.பள்ளிகொண்டா ஆய்வாளர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்து டிஜிபி அசோக் குமார் உத்தரவு. 2.விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் மாற்றம் – மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு. 3.சென்னை மக்களின் கனவு திட்டம் மெட்ரோ ரெயில் : ஜெயலலிதா நாளை தொடங்கி வைக்கிறார். 4.பிடி வாரன்ட் பிறப்பிக்க பட்ட தலைமறைவு குற்றவாளிகள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி. 5.தே.மு.தி.க. செல்வாக்கை இழந்துவிட்டது: டாக்டர் ராமதாஸ் தாக்கு. 6.மதுரை மேல அனுபானுபானடியில் ரவுடி […]

Continue reading »

இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்பட பூஜை

vijay-atlee

சென்னை ஈஞ்சம்பாக்கம் இஸ்கான் கோயில் அருகே உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் அட்லீ இப்படத்தை இயக்குகிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தானுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படம் குறித்து அட்லீ கூறுகையில், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகள் […]

Continue reading »

நட்பின் நேசம்!!!!!

friends

மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம். * மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம். * பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம். * பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம். * தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம். […]

Continue reading »

நெருக்கடி நிலை – அவசரகால பிரகடனம் (Indian Emergency – 25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977

Indiragandhi

இந்தியாவில் 21- மாத காலத்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர்பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய இந்தியப் பிரதமர்இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திராகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் […]

Continue reading »

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் கேள்விகள்!!!!!!!

traffic jam

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத ‘வசூல் கடமை’ செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் ‘சாதனைகள்’ தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள். 1. […]

Continue reading »

ஜெயலலிதா பிரசாரம் – ஆர்.கே. நகர் தொகுதியில்

jayalalitha

கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கடற்கரை சாலை, தலைமைச் செயலகம், துறைமுகம், ராயபுரம் கல் மண்டபம், காசிமேடு செக் போஸ்ட், வரதராஜ பெருமாள் கோவில் வழியாக அவரது கார் வந்தபோது அங்கு திரண்டிருந்த மகளிர் அணியினர் பூரண கும்பம் ஏந்தி, அவருக்கு வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலகம் அருகே படுகர் இனத்தவர்கள் நடனமாடி ஜெயலலிதாவுக்கு வரவேற்பு அளித்தனர். ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர் பேச ஆரம்பித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை […]

Continue reading »

இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டது.

india vs zimbaawe

மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக அடு்த்த மாதம் இந்திய அணி ஜிம்பாப்வே செல்லும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இத்தொடர் ரத்து செய்ய படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்று வருவதால் சோர்வடைந்துவிட்டனர். இவர்களுக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொடர் ரத்து செய்யபடுகிறது. இது தவிர இதற்கு, ஔிபரப்பு உரிமம் போன்ற பிரச்னையும் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

Continue reading »

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது

plane

உலகின் முதல் எலெக்ட்ரிக் பயணிகள் விமானத்தை சீனா தயாரித்துள்ளது. இந்த விமானம் அந்நாட்டின் சென்யாங் ஏரோ ஸ்பேசிங் பல்கலை மற்றும் லியோனிங் ருக்சியாங் ஜெனரல் ஏவியேஷன் கம்பெனியால் வடிவமைக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்றுள்ளது. 50 அடி நீள இறக்கை கொண்ட இந்த விமானம் 230 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாக இருக்கும். அதாவது ஒரே நேரத்தில் சராசரியாக 60 கிலோ எடையுள்ள நான்கு பேர் பயணிக்க முடியும். இதன் மாடல் எண் பி.எக்ஸ்.1. இரண்டு மணிநேரத்தில் சார்ஜ் ஆகக் கூடிய இந்த விமானம் […]

Continue reading »

மும்பையில், கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெரிய அளவில் மழை

Rain

கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டி உள்ளது. நேற்று காலையில் இருந்து தற்போது வரை 283.4 மி.மீ., என்ற அளவில் மழை பொழிவு இருந்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு, ஜுனில் 399 மி.மீ., மழைக்கு பின்னர் அதிகபட்சமாக இந்த ஆண்டு தான் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக மாநில நிர்வாகம் கூறி உள்ளது…

Continue reading »
1 7 8 9 10