Category Archives: கவிதைகள்

தமிழ் மாதங்கள்

tamil mathangal

தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும் மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும் பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம் சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும் வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும் ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும் ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும் புரட்டாசி விரதம் மாந்தரின் […]

Continue reading »

உயிர்வலி …!

Holding-Hands-36

நித்தமுனை சிந்தனை செய்தேன்! நிதர்சனம் நீயே என்றேன்! நினைவிலே இல்லை என்றாய்! நீள்கடல் சுருங்கும் என்றாய்! காரியமென்றால் மட்டும்! கட்டுண்டு கிடப்பாயென்றாய்! கருவென நினைத்தேனுன்னை! கழுதைக்கு நிகராய் வைத்தாய்! உயிரற்ற மரம்போலல்ல உயிருண்டு மெய்யும் உண்டு! உனக்கென இடமளித்தேன்! உதறினாய் உளத்தை கொன்றாய்! உதாசினம் உனதியல்பு! உண்மை மட்டும் தான் எனதியல்பு! உனக்கென்ன மேலே நின்றாய்! உடைந்ததென்னவோ என் இதயம்! உயிர்வலி இனியும் வேண்டாம்! உடனடியாய் உரியது செய்!

Continue reading »

விதி…!

download

விதைத்தது விளைந்தே தீரும்! விடியல்கள் தினமும் வரும்! விலகுதல் மடமையில் சேரும்! விருப்பமேயென்றால் மாறும்! விதியெனில் உனையே சாரும்!

Continue reading »

உன் திமிருக்கு அழகென்று பெயர் !

images

  அழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல உன் திமிருக்குந்தான் ! தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ ? என் திமிருக்குள் அழகான பாரதியே ! என் அழகுகுக்குள் திமிரான பாரதியே ! உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு ! அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும்! முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ ! நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ! […]

Continue reading »

எட்டாக்கனியாகிடுமோ !

agacdalindanar

எட்டாக்கனிக்கு ஏங்குகிறாய்! எட்டும் போது நீ தூங்குகிறாய்! ஏளனமோ உனைத் தாங்கும் ! ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ ? எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ ! தமிழ் எட்டாக்கனியாகிடுமோ !

Continue reading »

அமிழ்தெங்கே!

தமிழ்

விரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக!

Continue reading »

பாதியிலே கசந்து போச்சோ?

11072002_874541512606573_4439000920993596693_n

நாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய! உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ? புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் ? புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக! திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ?

Continue reading »

நட்போடு நான்! நண்பர்களாய் நாம்!

10891470_869128489814542_8443880690172035496_n

கூடிக்கிளைக்கும் காமமில்லை, கூடவேத்திரியும் காதல் கேட்டேன்! குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல! காமத்துக்கரசியுமல்ல! காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால்! எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ! என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ! விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க! வித்தையல்ல நீ, வியந்து பார்க்க! விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன? சாய்ந்து கொள்ள தோளாய் இரு! சரியும் போது தோழனாய் இரு! முழுவதுமா கேட்டேன் உன்னை! முப்பத்து மூன்று மட்டும் தா!

Continue reading »
1 2