Monthly Archives: May 2015

விதி…!

download

விதைத்தது விளைந்தே தீரும்! விடியல்கள் தினமும் வரும்! விலகுதல் மடமையில் சேரும்! விருப்பமேயென்றால் மாறும்! விதியெனில் உனையே சாரும்!

Continue reading »

கிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்

C101_Letter_Icon

கிடைக்கும் வெகுமதியை பற்றியும் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதம் தற்பொழுது வாட்ஸ் அப்பில் வெகுவாக பரவி வருகின்றது.அந்த கடிதத்தில் உள்ளவை பின் வருமாறு:- என் பெயர் உழவன் . வீட்டில் வைத்த பெயரைப் பற்றி நீங்கள் எந்த ஆய்வுக்கும் போகத் தேவையில்லை. ஏனெனில், எல்லாருக்கும் போலவே வீட்டில் எனக்கு வைத்த பெயர் மகிழ்வூட்டக்கூடியது. எல்லாரையும் போலவே அப் பெயருக்கும் எனக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. என் கிராமத்தில் என்னை ஏமாளி என்றும், நகர எல்லைக்குள் கோமாளி என்றும் அழைப்பது வழக்கம். மாநகர எல்லைக்குள் […]

Continue reading »

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது !

bovonto1

திருநெல்வேலியை சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டது.தமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற தமிழக தயாரிப்பு நிறுவனங்களுக்கு பல மாநிலங்களில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆங்கிலேயர் அட்சிக்காலத்தில் ”செபென்சர்ஸ்” என்ற ஆங்கிலேய நிறுவனத்தின் கடும் போட்டியை மீறி தனது பயணத்தை தொடங்கியது. உலகமயமாக்கலுக்கு பிறகு அமெரிக்க நிறுவனங்களான PEPSI,COCA COLA தனது நிறுவனங்களின் சந்தையை விரிவாக்க ஏற்கெனவே உள்ள உள்ளூர் தமிழக நிறுவனங்களை ஒழித்து கட்டும் முயற்சியில் ஈடுபட்டன. […]

Continue reading »

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் ..

icf1

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்த மாணவ மாணவியர் கவணத்திற்கு, சென்னையில் உள்ள இனைப்பு (ரயில் ) பெட்டி தொழிற்சாலையில் ஆக்ட் அப்ரேண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்ப படிவம் வழங்க பட்டுவருகிறது ……. விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் , நம் தமிழக மாணவர்களுக்கு இது சம்பந்தமான விழிப்புர்ணர்வை ஏற்படுத்த உதவுங்கள் , வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இதனை பற்றிய விழிப்புர்ணர்வு அதிகம், அதன் காரணமாகதான் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக முழுவதும் வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே […]

Continue reading »

உன் திமிருக்கு அழகென்று பெயர் !

images

  அழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல உன் திமிருக்குந்தான் ! தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ ? என் திமிருக்குள் அழகான பாரதியே ! என் அழகுகுக்குள் திமிரான பாரதியே ! உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு ! அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும்! முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ ! நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ! […]

Continue reading »

அஜித் படத்திற்கு வந்த ரகசிய கடித்தால் குழப்பத்தில் உள்ள எ.ஏம். ரத்னம் படக்குழுவினர்.

photo_2015-05-29_16-15-49

தமிழ் சினிமாவில் அஜித் படங்கள் என்றாலே எல்லோரிடத்திலும் ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தல-56 படம் சிவா இயக்கத்தில் அனைவரின் எதிர்ப்பார்ப்பு உரிய படமாக உள்ளது.இப்படத்தை பற்றி தினமும் ரசிகர்கள் கடிதம் எழுதி ஏ.எம்.ரத்னத்திற்கு அனுப்பி வைப்பார்களாம். இதில் முழுவதும் அஜித்தின் நலம் விசாரிப்புக்கள் தான் இடம்பெறுமாம்.ஆனால், அப்படி நினைத்து தான் கடந்த வாரம் ஒரு கடிதத்தை படித்தாராம் ரத்னம். இதில் ‘உங்களுடைய படத்தின் கதை அப்படியே எங்கள் படமான பாட்ஷா படத்தில் காப்பி என்று கூறுகிறார்கள், இதற்கு முறைப்படி நீங்கள் எங்களிடம் […]

Continue reading »

திருமணம் நின்றது குறித்து திரிஷா – மனம் திறந்து பேட்டி

photo_2015-05-29_16-13-34

திரிஷா பிரபல தயாரிப்பாளர் வருண்மணியனை திருமணம் செய்து கொள்வதாக கூறப்பட்டது. பின்னர் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அவர்களது திருமணம் தடைபட்டது. தற்போது முதன் முறையாக ஒரு பேட்டியில் த்ரிஷா தன் திருமணம் நின்றது குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் ‘திருமணம் நின்று போனது உண்மை தான், அதற்காக முடிந்ததை எண்ணி வருத்தப்பட்டு கொண்டே இருந்தால், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது’ என கூறியுள்ளார்.

Continue reading »

இரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா – ஐந்து வழிகள்

photo_2015-05-29_09-38-26

ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் இன்றிமையாத ஒன்றாகும். பசி ருசி அறியாது, நித்திரை சுகமறியாது என்று சொல்வார்கள். நிலத்தில் கடுமையான உழைக்கும் விவசாயி, கட்டிட தொழில் உள்பட அமைப்புச் சாரா தொழில் பிரிவில் பணியாற்றுவோருக்கு உழைப்பின் நிமித்தமாக இரவில் நல்ல தூக்கம் வரும். ஆனால் ஏசி அறையில் அமர்ந்து ஹாயாக பணியாற்றுவோர், வேலையில்லாமல் ஊர்சுற்றுவோர், சமூக பணி என்ற பெயரில் அரசியல் நடத்துவோர் உள்பட உடலுக்கு வேலை கொடுக்காமல், நெற்றியில் துளி வியர்வையும் சிந்தாமல் உள்ளவர்களுக்கு தூக்கம் என்பது எட்டா கனியாகவே உள்ளது. இப்படி இரவில் […]

Continue reading »

ஆஸ்துமாவிற்கு பயப்பட வேண்டாம் வந்து விட்டது புதியமுறையில் சிகிச்சை:

photo_2015-05-29_09-30-55

நீங்கள் மாசு நிறைந்த இடத்துக்குச் செல்கிறீர்கள். உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. இளைப்பு ஏற்படுகிறது. மூச்சு விட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்தது போல் உணர்கிறீர்கள். இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா இருக்கிறது என்று அர்த்தம். ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்லுவதைவிட, நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை; ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 2 கோடிப் […]

Continue reading »
1 2 3 6