ெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்!

03/06/2013 - TIRUCHY: Chief Minister J Jayalalithaa laying foundation stone for various new projects worth Rs 1752 crore in Srirangam  - Express Photo by M K Ashok Kumar. [Tamil Nadu, Chief Minister, J Jayalalithaa, Projects]

சென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக
தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய
சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119
சதவீதம் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் மேலும்
சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு
தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி குன்ஹா ஒவ்வொரு கடனுக்கும், கடன் கொடுக்க ஒப்புதல் கடிதம்
மற்றும் உண்மையிலேயே கடன் வங்கிக்குள் வந்ததா என்ற இரண்டையும் வைத்து
கடனுக்கான தொகையை நிர்ணயம் செய்தார்.

ஆனால் நீதிபதி குமாரசாமி கடன் கொடுக்க வங்கிகள் வழங்கிய ஒப்புதல்
கடிதத்தை மட்டும் வைத்து கடன் தொகையை முடிவு செய்துள்ளார்.
உதாரணத்திற்கு, இந்தியன் வங்கியிலிருந்து ஜெ. பார்ம் ஹவுஸ் 50 லட்சம்
கடன் வாங்கியதாக உயர் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் வங்கி
கணக்கு பதிவின் படி 28 லட்சம் தான் உள்ளே வந்துள்ளதாக குன்ஹா தீர்ப்பில்
கூறப்பட்டுள்ளது.

இது போன்ற பல பிழைகளை கணக்கில் எடுத்தால், வருமானத்திற்கு மீறிய சொத்து
8.12 சதவீதம் அல்ல, 77 சதவீதம் அல்ல, 119 சதவீதம் என்று தெரிகிறது.
அதற்கான இணைப்புகளை ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு வெளியிட்டுள்ளது” என்று
கூறப்பட்டுள்ளது.