வரி விலக்கு பெற 80சி பிரிவு தவிர 7 வழிகள் உண்டு!!

Tax

சென்னை: வருமானம் என்பது வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு ரூபாயிலிருந்து கோடி வரை சம்பாதிக்கும் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கின்றனர்.
என்னதான் சேமித்தாலும் வருடம் முழுவதும் கஷ்டப்பட்டாலும் ஆண்டு இறுதியில் நம்மை மிரட்டுவது வருமான வரிதான். வருமான வரி என்றாலே அனைவரும் அலறி ஒடுகின்றனர். அரசிற்கு நாம் செலுத்த வேண்டிய வரி பணத்தை சேமிக்க பல வழிகள் உண்டு. இதில் பிரபலமானவை 80சி வகை, ஆனால் இது தவிற பல வழிகள் உண்டு
வருமான வரியை கண்டு நீங்கள் அஞ்ச தேவையில்லை. நீங்கள் சேமிக்கும் மற்றும் செலவு செய்யும் பணத்திற்கான ரசிதை முறையாக எடுத்து வைத்திருந்தாலே போதும் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியும். உங்கள் குழந்தைகளுக்கோ, பெற்றோர்களுக்கோ உங்களுக்கோ ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் 80 டி பிரிவின் கீழ் உங்கள் டாக்ஸ்கான பலனை நீங்கள் பெற முடியும். அதாவது உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் நீங்கள் 15,000 வரை வரி விலக்கு பெற முடியும். சீனியர் சிட்டிசன் என்றால் ரூபாய் 20,000 வரை பெற முடியும்
நீங்கள் உங்கள் கல்விக்காக லோன் எடுத்திருந்தால் நீங்கள் செலுத்தும் முழு வட்டிக்கான டாக்ஸ்க்கை விலக்கை பெற முடியும். உங்களுடை முழு வட்டி தொகையையும் பிரிவு 80சி-க்கு கீழ் பெற முடியும். தனிப்பட்ட நபர் மட்டும் இதை பெற முடியும்
நீங்கள் செலுத்திய நன்கொடைக்ககான பணத்தை வரி சலுகை பெற பிரிவு 80Gக்கு கீழ் அனுமதிக்க படுகின்றீர்கள். ஆனால் நீங்கள் எந்த நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தீர்களோ அதற்கான ரசீதை முறையாக பெற்றிருக்க வேண்டும். அதனுடன் அந்த நிறுவனத்தின் pan எண் அதில் குறிப்பிட்டிருக்க அதற்கான டாக்ஸ் தள்ளூபடியை நீங்கள் பெற முடியும்
நீங்கள் HRA பெறா விட்டாலும் டாக்ஸ் தள்ளுப்படியை பெற முடியும். இதற்கான சட்டம் பிரிவு 80 GG யில் உள்ளது. மிக சிலரே இந்த பலனை பற்றி அறிவார்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் டாக்ஸிர்கான தள்ளுபடியை கோரும் நபருக்கு என சொந்தமாக வீடு இருத்தல் அவசியம்

நீங்கள் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிக்கொ நன்கொடை அளித்திருந்தால் sec 80GGCக்கு கீழ் டாக்ஸ் தள்ளுபடி அடைய முடியும். ஆகையால் அடுத்த முறை கவனமாக இருந்து பலன் பேற்று கொள்ளுங்கள்

ஒரு இந்திய வாசி பார்வையின்மை, குறைந்த பார்வை, மூளைக் கோளாறு, காது கேளாமை போன்ற பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால் டாக்ஸ் குறைப்பை பெற முடியும். இந்த பலனை பெறும் நபர் மேலே குறிப்பிட்டுள்ள குறைப்பாடுகளில் 40 சதவிகிதமாவது பெற்றிருக்க வேண்டும்

இந்த பிரிவு சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. நீங்கள் முதல் முறை இதை அனுபவிக்கின்றீர்கள் என்றால் 50,000 ரூபாய் வரை வரி விலக்கு பெற முடியும். அதுவும் உங்கள் வருமானம் ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டதின் படி பத்து லட்சமாக இருத்தல் அவசியம்