பேஸ்புக் வழியே வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வாழ்த்துக்குரிய கீழக்கரை இளைஞர் – 25000 ஐ தாண்டி சாதனை படைக்கும் நண்பர்கள் வட்டாரம்!

kilakarai classified

 

 

பேஸ்புக், டிவிட்டர் சமூக வலைதளங்கள் மக்களிடையே விரைவாக செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. இது போன்ற சமூக வளைத்தளங்கள் மூலமாக, பல நண்பர்கள் சமூக சிந்தனையுடன், எவ்வித இலாப நோக்கமுமின்றி அல்லும் பகலும் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் பணிகள் மென் மேலும் சிறக்க, நாம் வாழ்த்துகளை தெரிவிப்பது அவசியமான ஒன்றாகும்.

அவர்களுள் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த எஸ்.கே.வி. சேக் என்ற இளைஞர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் “கீழக்கரை கிளாஸிபைட்” என்கிற பெயரில் வேலை தேடும் இளைய தலை முறையினருக்கு பயனளிக்கும் விதமாக, ஒரு சிறப்பான, பக்கத்தை உருவாக்கி உலகின் பல பகுதிகளில் இருந்து நண்பர்கள் மூலமாகவும், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் வழியாகவும் கிடைக்கும் வேலைவாய்ப்பு செய்திகளை இப்பக்கத்தில் அன்றாடம் தொகுத்து, தொய்வின்றி அளித்து வருகிறார்.

“கீழக்கரை கிளாஸிபைட்” பக்கத்தில் இணைய விரும்பும் நண்பர்கள் கீழ் வரும் லிங்கை சொடுக்கவும்.
https://www.facebook.com/kilakaraiclassifiedgroup

துபாயில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வரும் எஸ்.கே.வி.சேக் அவர்கள் முன்னதாக கீழக்கரை டைம்ஸ் வலை தளத்திற்கு அளித்திருந்த பேட்டியில்.

பணி நேரம் முடிந்து கிடைக்கும் நேரத்தில் பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இப்பக்கத்தை தொடங்கினேன்.

இதன் மூலம் பலருக்கு உதவிகரமாக இருப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இதில் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்பு செய்தியை பார்த்து நேர்முக தேர்விற்கு சென்று செலெக்ட் ஆகி பணி கிடைத்தது என்று என்னிடம் சம்பந்தப்பட்டவர்கள் தகவல் தரும் போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவிருக்காது.

ஆயிரக்காணக்கானோர் இதை விட பல மடங்கு சேவை செய்து வருகிறார்கள். நாங்கள் செய்து வருவது அதில் ஒரு துளி தான்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“மாணிக்க விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும்” என்பார்கள். அது போல படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு, இந்த தளம் மிகப் பெரிய உதவி புரியும் வழிகாட்டியாகவும், தூண்டு கோலாகவும் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இறைவன் அருளால் “கீழக்கரை கிளாஸிபைட்” எஸ்.கே.வி. சேக் அவர்களின் ஒப்பற்ற இந்த பணி மென் மேலும் சிறக்க கீழை இளையவன் வலை தளம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
.