பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-

Piranap mugarji

நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:-

நாடாளுமன்றம் விவாதம் நடத்தும் இடமாக இல்லாமல் போராடும் இடமாகி உள்ளது. அரசியலமைப்ப அளித்த மிகப்பெரிய பரிசுதான் ஜனநாயகம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகும்போது கவனமாக யோசித்து அதற்கு தீர்வு காண வேணடும்.

பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் களமாக அண்டை நாடுகள் இருக்கக் கூடாது. வங்காளதேசத்துடனான எல்லைப் பிரச்சினை முடிவுக்கு வந்தது உற்சாகமூட்டுகிறது.

பசித்தவர்கள் இல்லாத எதிர்காலத்தை உறுதி செய்வதாக நமது கொள்கைகள் இருக்க வேண்டும். வெள்ள பாதிப்பு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும்.

மாணவர்களும் ஆசிரியகளும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மூலம் பெண்களின் நிலையை முன்னேற்றத்தை கொண்டு வந்துள்ளோம் என்று அவர் உரையாற்றினார்.