பல்பு வாங்கிய ஜெயம் ரவி

maxresdefault-752x440

நடிப்பு, நடனம் என சிறந்து விளங்கும் ஜெயம் ரவி தற்போது பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் தற்போது ‘அப்பாடக்கர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அஞ்சலி நடித்து வருகிறார்கள். மேலும் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சுராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் இமானை ஒரு பாடலுக்கு பாட வைத்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ… ஹிட்டு சாங் மா நீ…’ என தொடங்கும் குத்துப்பாடலை பாட வைத்தார்.
தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார். ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்…’ எனத்தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி.