பஞ்ச ரோடு – பெயர் காரணம் – என்ன தெரியுமா .?

child-poverty-in-indian-slums

1895 ஆம் ஆண்டு நம் நாட்டில் ஏற்ப்பட்ட கடுமையான பஞ்சத்தின் போது அப்போதைய வெள்ளைக்காரன் தோராய கணக்குப்படி சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பசியால் மட்டுமே இறந்துவிட்டனர் …

அந்த நேரத்தில் வெள்ளைக்காரன் பஞ்சத்தை போக்க எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக் கொண்டானாம் …

வெளிநாடுகளில் இருந்து கப்பல் கப்பலாய் உணவு தானியங்களை கொண்டுவந்து இறக்கியும் பஞ்சம் தீரவில்லை

எங்கு பார்த்தாலும் பசி பட்டினி …
மரண ஓலங்கள் …

அந்த நேரத்தில்தான் வெள்ளைக்காரன், உணவு தானியங்களை விரைவாக பல ஊர்களுக்கு எடுத்துச்செல்ல, பஞ்சத்தால் வாடும் மக்களை வைத்தே அந்த சாலையை அமைத்தானாம்.

ரோடு போட போறவங்களுக்கு கூலியாக ஒரு குவளை அரிசி கஞ்சி குடுப்பானாம் ….

அதனாலதான் அந்த
(திருச்சி – சென்னை) ரோட்டுக்கு…. பஞ்ச ரோடு…. அப்புடின்னு பேரு வந்துச்சாம் ….

அப்போதைய மக்கள் தொகை பதினேழு கோடி மட்டுமே … இப்போ நூத்தி இருபது கோடிக்குமேல் …

அதே பஞ்சம் இப்போ வந்தா என்ன ஆகும் … ???

அப்போ இருந்த வெள்ளைக்காரன் வெளிநாடுகளில் இருந்து தானியங்களை கொண்டு வந்து இறக்கினான் …

இப்போ நமக்கு எந்த நாட்டுக்காரன் தானியம் குடுப்பான்

சீனா காரன் காசு வாங்கிகிட்டு பிளாஸ்டிக் சாமான் குடுப்பான்.

அமேரிக்கா காரன் காசு வாங்கிகிட்டு கோகோ கோலா குடுப்பான்.

யாராவது அரிசி
குடுப்பானுங்களா …. ???

முகநூலில் நண்பர்கள் எல்லாரும் பசி பட்டினி பஞ்சம் என்றால் சோமாலியாவைதான் சுட்டி காட்டுகின்றனர்…..

வெளிநாட்டுகாரன்…. பசி, பட்டினி, ஏழை, பஞ்சம் …. இவைகளுக்கு இந்தியாவை மட்டுமே உதாரணமாக சொல்கிறான்… என்பது உங்களுக்கு தெரியுமா… ???

இப்போது உங்கள் கண்களுக்கு கோமாளிகளாக தெரியும் விவசாயிகள் ஒவ்வொருவரும் அப்போது தெய்வமாக தெரிவார்கள்.

நம் நாட்டில் பசுமை அழிக்கப்படுகிறது என்று சொல்வதை விட….

நம் நாடு அழிக்கப்படுகிறது என்றே சொல்லலாம் ….

அரசு விதி முறைகளின்படி குறிப்பாக தஞ்சை மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படக்கூடாது.

அப்படியே மாற்றினாலும், வீட்டு மனைகளாக மாற்றப்படும் நிலங்கள் ஒன்றுக்கும் உதவாத தரிசு நிலங்களாக பல வருடங்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தப்படாமல் இருந்திருக்க வேண்டும்….

அப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்கு முன் நெல், கரும்பு, எள், வாழை, உளுந்து முதலியன சாகுபடி செய்யப்பட விவசாய நிலங்கள் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ள …

தஞ்சை மாவட்டம், திருவையாறு, திரு அய்யாறு அப்பர் கோவிலுக்கு வடக்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் விலாங்குடிக்கு அருகில், தஞ்சையில் இருந்து அரியலூர் செல்லும் சாலையை ஒட்டி, நெல், கரும்பு சாகுபடி செய்யும் விவசாய விளை நிலங்களில் திடீரென தோன்றியுள்ளது …..ஹாஜீரா நகர்…..

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம், தஞ்சை மாவட்டத்தில் அதுவும் ஐந்து ஆறுகள் பாய்ந்து முப்போகம் நெல் விளைச்சலில் முதலிடமாக இருக்கும் திருவையாறு பகுதியில், பொன் விளையும் பூமியில் வீட்டுமனை போட வேண்டிய அவசியம் என்ன …. ???

முக்கிய அரசியல் பிரமுகரின் பினாமி ஒருவரால், ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கப்பட்டு சுமார் இருநூறு ஏக்கருக்கு மேல் திடீரென வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளன.

திருவையாறு தாலுக்கா ஆபீசில் உள்ள அரசு அதிகாரிகள் கோடிக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டு அரசு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியுள்ளனர்…

இது போன்ற நிகழ்வுகள் உடனடியாக தடுக்கபடவில்லை எனில் அடுத்த பஞ்சத்தின்போது பசி பட்டினியால் சாகும் மக்களின் எண்ணிக்கை பத்து கோடியாக இருக்கும் …

பஞ்சம் என்று ஒன்று வந்துவிட்டால் நம் பிள்ளைகள் நம் முன்னே பசியால் செத்து மடியும் கோரக்காட்சிகள் அரங்கேறும் என்பதை மறவாதீர்….

நாட்டையே கொள்ளையடித்து கோடி கோடியாக குவித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகளும், அவர்களுடைய பினாமிகளும் அப்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி ஒய்யாரமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ….

அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனதில் வைக்கவும் …