நட்போடு நான்! நண்பர்களாய் நாம்!

10891470_869128489814542_8443880690172035496_n

கூடிக்கிளைக்கும் காமமில்லை,
கூடவேத்திரியும் காதல் கேட்டேன்!
குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட,
காரியதரிசியுமல்ல! காமத்துக்கரசியுமல்ல!
காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால்!

எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ!
என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ!

விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க!
வித்தையல்ல நீ, வியந்து பார்க்க!
விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன?

சாய்ந்து கொள்ள தோளாய் இரு!
சரியும் போது தோழனாய் இரு!

முழுவதுமா கேட்டேன் உன்னை!
முப்பத்து மூன்று மட்டும் தா!