தல 56′ (தற்காலிக தலைப்பு)

shrutihaasan-ajith

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” என கூறியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியை விட தங்கை வேடத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக பேசப்படுகிறது. இதன் முதல் ஷெட்யூல் சமீபத்தில் நிறைவு பெற்றுள்ளது. இதில் அஜித் லக்ஷ்மி மேனனை கல்லூரிக்கு அழைத்து செல்வதுபோல் சில காட்சிகள் படமாகியுள்ளது.

பழைய நண்பருடன் மீண்டும் இணைந்த அஜித்!நடிகர் அஜித் தனது ஆரம்ப நாட்களில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியுடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் தற்போது நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி கடும் நிதி பிரச்னையில் சிக்கி தவித்து வருகிறார். இதனால் சிம்புவை வைத்து அவர் தயாரித்துள்ள வாலு திரைப்படத்தை வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித் தனது நண்பருக்கு உதவும் விதமாக அவரது பேனரில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இது உண்மையாகும் பச்சத்தில் அஜித், விஷ்ணுவர்த்தன் இணையும் மூணாவது படமாக இது உருவெடுக்கும். இவர்கள் ஏற்கனவே பில்லா, ஆரம்பம் ஆகிய வெற்றிப்படங்களில் இணைந்துள்ளனர்.