தமிழ் பழமொழிகள்…….

tamil proverbs

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா?
* கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
* கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
* கடன் வாங்கிக் கை கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்
* கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
* கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்
* கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.
* கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
* கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்
* கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
* கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
* கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
* கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.
* காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
* காய்த்த மரம் கல் அடிபடும்.
* கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
* குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
* கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.