டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்

article-2309018-194B2798000005DC-395_634x311

புதுடெல்லி, மே 26:  டில்லி உயர்நீதி மன்றம்,  ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனுவை விசாரித்த நீதிபதி நேற்று மனுவை தள்ளுபடி செய்தார், கைது செய்யப்பட்ட காவலர் டில்லியை சேர்ந்தவர் என்பதால் அவர் மீது நடவ டிக்கை எடுக்க டில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊழல் தடுப்பு பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அவரிடம் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்றும் தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பினை முதலமைச்சர் கெஜ்ரிவால் பாராட்டினார்.

Courtesy: viduthali