டாப் 10 கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம்….மன்னிப்பு கேட்டது கூகுள் நிறுவனம்….

MODI

அதிபயங்கர குற்றவாளிகள் என்று கூகுளில் தேடினால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வருவதையடுத்து, கூகுள் நிறுவனம், மோடியிடம் மன்னிப்பு கேட்டுள்ளது இப்போதும் கூட உலகத்தில் டாப் 10 கிரிமினல்கள் என்று கூகுளில் தேடினால் தாவூத் இப்ராஹிம், ஒசாமா பின் லேடன், ஹபீஸ் சையது, அய்மன் அல் ஜவாஹிரி ஆகியோருடன் மோடியின் படமும் தோன்றுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், இது நிச்சயம் தங்களுக்கு விவகாரத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும், இது தங்கள் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்றும் கூறியுள்ளது. கிரிமினல்கள் பட்டியலில் மோடியின் படம் இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மோடியின் புகைப்படத்தை கிரிமினல்கள் பட்டியலில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.