சற்று முன் ! 12/08/2015

flashnews-343x250

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.

மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தி.மு.க.வினர் மது ஆலைகளை உடனே மூடுக – மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாசு மனம் திறந்த மடல்.

சிவாஜி வீடு அமைந்துள்ள போக் சாலை சந்திப்பில் உள்ள மதுக்கடை தற்போது கொளுத்தப்பட்டது.அங்கு அனுமதியின்றி பார் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பழநடுகுப்பத்தில் கடலில் மர்ம பொருள் மிதந்து வந்ததை எடுக்கும் போது வெடித்துள்ளது. இந்த விபத்தில் 2-மீனவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி.

புதுக்கோட்டை தலைமை மருத்துவமனையில் காமலீலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மனு.

நாகர்கோவில் அருகே 15 வயது மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த தூத்துக்குடி டிரைவர் செல்வத்திற்கு 18 ஆண்டு 20ஆயிரம் அபராதம். மகளிர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு.