“சன் குழுமத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும்…” 

SunTV

மாநில ஆட்சியின் போது: 1) சுமங்கலி கேபிள்காரர்கள், மற்ற போட்டி கேபிள் நிறுவனங்களுக்குள் புகுந்து ரவுடிகளை வைத்து மிரட்டி, அவர்கள் உபகரணங்களை நாசம் செய்து,.. தங்கள் சாம்ராஜ்ஜியத்தை விரிவு செய்ய அனுமதித்தீர்களே,…  அது எந்த குரல்வளையை நெரித்த செயல்?
2) மத்திய அரசில் , ஜெயா டிவியின் 24 மணிநேர சானலுக்கு அனுமதி கேட்டு வருடக்கணக்கில் காத்திருந்தும் உங்கள் மருமகன் தயாநிதி அதைக் கிடப்பில் போட்டபோது,…. அது எந்த குரல்வளையை நெரித்த செயல்?
3) ராஜ், விஜய் டிவிக்கு கொடுத்த “அழுத்தம்” ….. எந்த குரல்வளையை நெரித்த செயல்?
4) கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், … அங்குள்ள மாநில மொழிச் சானல்களுக்கு தந்த “அழுத்தம்”…. எந்த குரல்வளையை நெரித்த செயல்?
5) தமிழக சினிமாக்காரர்களுக்கு, சீரியல் தயாரிப்பாளர்களுக்கு, தியேட்டர்காரர்களுக்கு,விநியோகஸ்தர்களுக்கு தந்த “அழுத்தம்”,… அது எந்த குரல்வளையை நெரித்த செயல்?
6) குடும்பத்தகராறில், முதல்வராக அரசு கேபிளைத் துவக்கி, பின், உங்களுக்குள் சமரசம் ஆனதும்,மக்கள் வரிப்பணத்தை வீணடித்து, உங்களை நம்பி சுமங்கலி வேண்டாம் என்று அரசுப் பக்கம் வந்தவர்களை அம்போ என்று விட்டீர்களே,… அது எந்த குரல்வளையை நெரித்த செயல்? தவிர,… 5 முறை முதல்வராக, நீங்கள் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்த சரித்திரம்… வரலாறு!  சத்யநாராயணா, மாணவன் உதயகுமார்,… போன்றவர் நேரில் திரும்ப வரமுடிந்தால், உங்கள் அந்த வரலாறு அரங்கேறும்! ———————– இதனாலெல்லாம், வரும் நியாயமான டவுட்டு: இப்பொழுது, “ஜனநாயகத்தின் குரல்வளை” மீது என்ன திடீரென கரிசனம்?  ரத்தபாசமா?இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தமிழ்நாடு அரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்க்கு (Arasu Cable TV) DTH உரிமம் கிடைக்காமல் இருப்பதற்கான அடித்தளம் அமைத்தபோது….அது எந்த குரல்வளையை நெரித்த செயல்?

முகநூலில் படித்தது