காவல் துறை சங்கம்…………..

Police

காவல் துறை சங்கம் தொடர்பான வழக்கில்,… அரசு சார்பில் காவலர் குறை தீர் நாள் மூலம் காவலர்கள் குறைகள் அனைத்தும் தீர்க்கபடுவதாக கூறி இருப்பது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையாகும்.

மேற்படி குறை தீர் முகாமானது எப்பொழுதாவது நடைபெறும் ஒரு முகாம். இதில் என்ன குறைகள் கேட்க வேண்டும் என அவர்களே சுற்றறிக்கை மூலம் தெரிவித்து விடுவார்கள். அதாவது பணி இட மாற்றம் மட்டுமே கேட்க வேண்டும். இதில் பயன் அடைந்தவர்கள் சிலரே.
என்னுடைய கேள்வி என்னவென்றால் காவலர்களின் பிரச்சினை இது ஒன்றுதான????

காவலர்களுக்கு குறை தீர் முகாம் நடப்பதால் சங்கம் தேவை இல்லையாம்.
அப்படியெனில் ஏறக்குறைய அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது போன்ற பணி மாறுதல்களுக்கான முகாம்கள் நடைபெறுகின்றன. பிறகு ஏன் அவர்களுக்கு மட்டும் சங்கம்?
காவல்துறையில் உயர் அதிகாரிகளுக்கு (IPS)மட்டும் சங்கம் உண்டாம்.
அனைத்து சலுகைகளும் உடைய அவர்களுக்கு மட்டும் சங்கம் எப்படி கொடுக்கப்பட்டது?
அவர்களுக்கும் சங்கத்தை ரத்து செய்துவிட்டு குறைதீர் முகாம்கள் நடத்தலாமே!!!!

சங்கம் கொடுத்தால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்கின்றனர்.
எந்த ஒரு அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அதை சார்ந்தவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர். ஆனால் நாங்கள் வேலை நிறுத்தம் செய்தால் பாதுகாப்பு பிரச்சனை என்பதால் அனைவரும் பாதிக்கப்படுவர். பிறகு இதனால் ஏற்படும் பிரச்சனை களை நாங்களே நினைத்தாலும் சரி செய்ய முடியாது என்பதால் காவல்துறையில் பணிபுரியும் எவருக்கும் வேலை நிறுத்தம் என்ற எண்ணமே ஏற்படாது என்பதுதான் உண்மை.
ஆறாவது சம்பள கமிழன் அமைக்கப்பட்டபோது அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது சங்கங்களின் மூலம் தங்களது சம்பள குறைபாடுகளஐ கூறினர். ஆனால் எங்கள் குறைகளை யாரிடம் கூறுவது. இதற்காக குறை தீர் நாள் வைக்கப்பட்டதா என்றால் எதுவும் இல்லை. IPS அதிகாரிகளுக்கு மட்டும் குழு அமைக்கப்பட்டது. ஒரே பிரிவில் வேலை பார்க்கும் எங்களுக்குள் இந்த ஓரவஞ்சனை ஏன்?
ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் உள்ளது.
இதற்காகதான் நாங்களும் கேட்கிறோம் சங்கம். எங்கள் உரிமைகளை பெறுவதற்கு மட்டுமே.
8 மணி நேர வேலை கூட வேண்டாம். 8 மணி நேரமாவது ஒய்வாவது கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

வருடத்திற்கு 12 நாட்கள்,.-
இதுதான் எங்களுக்கு வழங்கபட்டிருக்கும் ஒரு வருட விடுப்பு. எந்த அரசு விடுமுறையோ கோடை விடுமுறையோ கிடையாது.
இந்த 12 நாட்களை விடுமுறையாக எடுத்துவிட்டால் அது உலக அதிசயத்தில் ஒன்றாகும். இது ஒன்றே போதும் எங்களது குறை தீர் முகாம் எங்கள் குறைகளை எந்த அளவிற்கு தீர்த்துவிட்டது என்பதை நிருபிக்க,…

பொங்கல் , தீபாவளி, நல்லது , கெட்டது, கல்யாணம் கருமாதி எதுவும் எங்களுக்கு கிடையாது. இவ்வளவு ஏன் எங்கள் மனைவிகளுடன் கொஞ்ச நேரம் சந்தோசமக இருக்க விடமாட்டார்கள். டூட்டி டூட்டி டூட்டி.
தற்போது எங்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலமையில் உள்ளது.

எங்களுக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என்பதற்கு சமீபத்திய கலவரம் ஒன்றே எடுத்துகாட்டு.

எங்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது பெண் காவலர்களை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.
மிகப்பெரிய காவலர் பற்றாக்குறை. இருப்பவர்களில் பாதிபேர் அதிகாரிகளின் எடுபிடி. இந்த லட்சணத்தில் போனால் சட்டம் ஒழுங்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி…
இதற்கு ஒரே தீர்வு சங்கம் மட்டுமே.
காவலர் சகோதர்களே இப்போ விட்டால் இனி சங்கம் என்பது நமக்கு எட்டா கனியே. தற்போதைய. நமது ஒரே நம்பிக்கை வழக்கறிஞர் திரு.மது ஐயா மட்டுமே. இதை படித்து விட்டு நீங்களும் உங்கள் கருத்துகளை நமது வழக்கறிஞரிடம் பகிர்ந்து கொள்ளவும். அன்புடன் ஒரு காவல் நண்பன்