கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரம்

aircraft

கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரத்தினால், ஆப்ரேஷன் “ஆம்லா’ பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் வகையிலும், தமிழகம், புதுச்சேரியில் இவ்வொத்திகை மேற்கொள்ளப்படுவது வழக்கம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆப்ரேசன் ஆம்லா ஒத்திகை 36 மணி நேரம் நடப்பதாக இருந்தது. தற்போது ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 13 மாவட்ட எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. பின்னர் ஆப்ரேசன் ஆம்லா 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாயமான கடலோர காவல்படை விமானம், சிதம்பரத்திற்கு கிழக்கே சதுப்பு நிலக் காடுகளுக்குள் விழுந்திருக்கலாம் – கடலோர காவல்படையின் ஐ.ஜி. சர்மா சந்தேகம்

விமானம் காணாமல் போனது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் விளக்கம்

இரவு 9.23 மணிக்கு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன், உடனடியாக தேடுதல் பணியை மேற்கொண்டபோதிலும், விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை

கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் கப்பல்களும், அரக்கோணம் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து விமானங்களும் தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன

கடைசியாக சிதம்பரத்திற்கு கிழக்கே 16 மைல் தொலைவில் 9 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது ரேடாரில் பதிவாகி இருந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளுக்குள் டோர்னியர் விமானம் விழுந்திருக்கலாம்

மாயமான விமானத்தை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது : ஐ.ஜி., சர்மா.