ஊழல் குற்றச்சாட்டு எதுவுமின்றி ஓராண்டை நிறைவு செய்கிறோம் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பெருமை பேசியிருக்கிறார்.

ArunJaitley

ஊழல் என்றால் என்ன என்பதில் எனக்கு சில அடிப்படை சந்தேகங்கள் இருக்கின்றன.

ஒரு திட்டத்தில் இத்தனை கோடிகள் அடித்தார் என்பது மட்டும் தான் ஊழலா?

ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து, அதை ஒரு தனிநபரின் சொத்தாக மாற்ற முயல்வது ஊழல் ஆகாதா?

விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கி, தனியார் பெருமுதலாளிகளின் சட்டைப் பைக்குள் வைப்பது ஊழல் ஆகாதா?

ஒரு குளிர்பான நிறுவனத்தின் உற்பத்திக்காக, மக்களின் சொத்தான ஆற்று நீரையும் மற்ற நீராதாரங்களையும் படையல் வைப்பது ஊழல் ஆகாதா?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாதியாகக் குறைந்தாலும், தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் சம்பாதிக்கும் பெட்ரோலிய நிறுவனங்களை அனுமதிப்பது ஊழல் இல்லையா?

மக்களின் வரிப்பணத்தில் 317 கோடி ரூபாய் பத்து மாதத்தில் ஊர் சுற்றச் செலவு செய்தது எல்லாம் ஊழல் வரிசையில் சேர்க்க முடியாதா?

ஊழலை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் ?