இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்பட பூஜை

vijay-atlee

சென்னை ஈஞ்சம்பாக்கம் இஸ்கான் கோயில் அருகே உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் அட்லீ இப்படத்தை இயக்குகிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தானுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படம் குறித்து அட்லீ கூறுகையில், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்கமுழுக்க விஜய்க்காகவே கதை தயார் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளராக தானு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை சென்னையில் நடைபெற இருக்கிறது

 

குறிப்பு- விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.