இன்றைய பரபரப்பு செய்திகள் 01.09.15 !

FlashNews-Logo

புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரையும் 3 விசைப்படகுகளையும் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை.

இலங்கை கடற்படை ராமேஸ்வரம் படகுகளில் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மீனவர்களையும் விரட்டியடித்தனர்.

போலீசாருடன் மாதேசி குழுவினர் மோதல்: நேபாள- இந்தியா எல்லை நகரத்தில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு.

பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை காதலிக்காததால் சக மாணவ, மாணவியர்கள் கேலி, கிண்டல் மாணவி கார்த்திகா தற்க்கொலை.உடல் ஸ்டான்லி மருத்துவ மனையில் உள்ளது.கேலி, கிண்டல் செய்த மாணவ, மாணவியரை கைது செய்ய கோரி கொடுங்கையூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை.

ஈராக்கில் 4 பேரை உயிருடன் எரித்துக் கொலை செய்து, அதன் விடியோ காட்சியை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் அதன் ஐ.எஸ். தீவிரவாதிகள்.

டெல்லி அவுரங்கசீப் சாலைக்கு அப்துல்கலாம் பெயர் வைத்ததற்கு முஸ்லிம் இயக்கம் எதிர்ப்பு.

மரண தண்டனை கூடாது – சட்ட ஆணையம் பரிந்துரை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது -தொல்.திருமாவளவன் அறிக்கை.

பூதிப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சுர்ய பாண்டி என்பவரை பழனிசெட்டிபட்டி காவல்துறை கைது செய்தனர்.

பாண்டிச்சேரியில் இருந்து மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கல்லீரல் ஆம்புலன்சில் மதுரை அப்பலோ மருத்துவமனைக்கு
வந்து கொண்டிருக்கிறது .

தர்மபுரி நகர குடியிருப்பு பகுதியில் குப்பையில் பிறந்து சிலமணிநேரமே ஆன பெண்சிசு சடலம் பொதுமக்கள் அதிர்ச்சி.

சென்னையை அடுத்த மீஞ்சூரில் வடமாநில வாலிபர் பொதுமக்களால் அடித்து கொலை.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் இரத்த காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை.

சென்னை மாநகரில் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம்: மெட்ரோ ரெயிலில் 20 சதவீத கட்டண சலுகை இன்று முதல் அமல்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவலில் மாமன்னர் பூலிதேவரின் 300ஆவது பிறந்தநாள் விழா துவங்கியது. மாமன்னரின் வாரிசுகள் பூலிதேவரின் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

சிவகங்கையில் இலவச பாட புத்தகத்தை விற்ற ஊழியர் சஸ்பெண்டு: கல்வி அதிகாரி நடவடிக்கை

அகதிகள் படகு லிபிய கடற்கரையில் மூழ்கியது: 37 பேர் பலி

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது: சட்ட ஆணையம் அறிக்கை

பயங்கரவாதி முல்லா ஒமர் 2013-ம் ஆண்டே இறந்து விட்டார்: மரணத்தை 2 ஆண்டுகளாக மூடி மறைத்த தலிபான்

கோவா மாநிலத்துக்குள் ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் தலைவர் கோவா மாநிலத்திற்குள் நுழைய தடை விதித்தது சரியே- உச்ச நீதிமன்றம்

அகில இந்திய பொது வேலைநிறுத்தம்: நாளை ஆட்டோக்கள் ஓடாது

பாகிஸ்தான் பகுதியில் ராணுவ தாக்குதல் நடத்த இந்திரா காந்தி திட்டமிட்டார்: மத்திய உளவு பிரிவு அறிக்கையில் தகவல்.