இன்றைய பரபரப்பு செய்திகள் 12.08.15 !

FlashNews-Logo

அரசு நலத்திட்டங்கள் பெற ஆதார் அடையாள அட்டை அவசியம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு.

விபத்தில் இறந்து போன 3 பைலட் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்க இன்று மதியம் தமிழக முதல்வர் தலைமை செயலகம் வருகிறார்.

புழல் சிறையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதாக அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

சின்னமலை – பரங்கிமலை ராணுவ அகாடமி இடையிலான மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் இன்று நடைபெறுகிறது.

பேரங்கியூர் சுடுகாட்டில் இளம் பெண் கற்பழித்து பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை.

காந்தியவாதி திரு.சசிபெருமாள் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ராகுல் காந்தி கடிதம்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்ததை பொதுப்பணித்துறை மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல் செய்யக்கோரியும் கைது செய்யப்பட்ட பச்சையப்பா கல்லூரி மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் அறந்தாங்கி பாரதிதாசன் பல்கலைக் கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய ஒரு லாரி 3-மாட்டுவண்டிகள் பறிமுதல் – செங்கல்பட்டு கோட்டாச்சியர் நடவடிக்கை.

வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.

தயாநிதி மனு இன்று விசாரணை

தங்கம் சவரனுக்கு ரூ 112 உயர்வு.