இன்றைய பரபரப்பு செய்திகள் 07.08.15 !

FlashNews-Logo

சென்னை வந்தார் பிரதமர் மோடி – ரோசைய்யா, ஜெயலலிதா ,பொன்.ராதா, தமிழக அமைச்சர்களும் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.

நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம்.

கோவை பாராளுமன்ற உறுப்பினர் நாகராஜ் தேர்தல் நேரத்தில் ஒரு கோடி ரூபாய் பணம் கடனாக வாங்கி திருப்பித்தரவில்லை என கோவில்பாளையம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார். அ தி மு க வட்டாரத்தில் பரபரப்பு.

சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பத்தாயிரம் போலிஸ் பாதுகாப்பு.

டாஸ்மாக் மதுபான கடைகளை பாதுகாக்க எண்பதாயிரம் போலிஸ்.

பள்ளிபாளையம் தொழிலதிபர் ஜெகநாதன் வெட்டி கொலை.

சேலம் கொண்டுவரப்பட்ட சசிபெருமாளின் உடலுடன் தடையை மீறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊர்வலமாக செல்கிறார். ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்துள்ள போலீசாருடன் வைகோ வாக்குவாதம் செய்து வருவதால், அங்கு பதற்றம் காணப்படுகிறது.

கோவில்பட்டி வ.வு.சி. அரசு பள்ளி எதிரே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அனைத்திந்தி இளைஞர் பெருமன்றத்தினர். டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட முயற்சி கைது.

பூரண மதுவிலக்கு தமிழ்நாட்டில் எப்போது கொண்டு வரப்படுமோ அப்போது தான் சசிபெருமாளின் ஆன்மா சாந்தியடையும் என வைகோ நாகர்கோவிலில் பேட்டி.

ஏழுகிணறு காவல் நிலையத்தில் கந்து வட்டி கொடுமை காரணமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் மெக்கானிக் ஷாஜகான் பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலை முயற்சி. அவரை காப்பாற்றி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே பாலாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2-டிராக்டர்கள் பறிமுதல் – செங்கல்பட்டு கோட்டாச்சியர் நடவடிக்கை.

கோவில்பட்டி அருகே கடம்பூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம்.