இன்றைய பரபரப்பு செய்திகள் 06.08.15 !

FlashNews-Logo

முல்லைபெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட அனுமதி மறுப்பு : கேரள அரசின் விண்ணப்பத்தை நிராகரித்தது மத்திய அரசு.

பிரதமர் மோடி நாளை மதியம் ஜெயலலிதாவை போயஸ் இல்லத்தில் சந்திக்கிறார்.

சசிபெருமாள் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் நாளை உடல் இறுதிச்சடங்கு நடைபெறும்.

ஆந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி – தலைமைச் செயலகத்தில் ஆணைகளை வழங்கினார் ஜெயலலிதா.

நாளை சென்னை வரும் மோடிக்கு திட்டமிட்டபடி கருப்புக்கொடி காட்டுவோம் : ஈவிகேஎஸ்.இளங்கோவன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கூட்டம் சிந்தாதரிப் பேட்டையில் நடைபெற்று வருகிறது.

மதுரை உள்ளிட்ட இடங்களில் செய்தி சேனல்கள் முடக்கம்: டாஸ்மாக்கை பாதுகாக்க தமிழக அரசின் நூதன திட்டம்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடை மூட வேண்டும் என்று மனு தாக்கல்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடக்கூடாது என கூறி திருப்பூர் ஊத்துக்குளி கயித்தமலை பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் மீதேறி கட்டிட தொழிலாளி தற்கொலை மிரட்டல்.

கன்னியாகுமரியில் இருந்து காஞ்சிபுரம் வரை ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம்.

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம். ஆனந்தன் வனத்துறை அமைச்சராக நியமனம். முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா உத்தரவு.

புதுச்சேரி சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கு, இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசாருக்கு 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் இன்று அனுமதி.

நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி நிகழ்ச்சி முடிந்து தமிழக முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.

விக்கிபீடியா இணையதளப் பக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவை இழிவுபடுத்தும் விதமான தகவல்கள் வெளியிட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது.

கோவில்பட்டி நாலாட்டின்புதூா் அருகே இருக்கன்குடி மாாியம்மன்கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தா்கள் மீது அரசு பஸ் மோதி விபத்து – 2போ் பலியனதாக தகவல்.

சென்னை கே.கே.நகரில் டாஸ்மாக் மதுபானக்கடை மீது தாக்குதல்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்திட உடனடியாக தமிழக அமைச்சரவையின் சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் இராமநாதபுரத்தில் புதிய தமிழக கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி.

டாஸ்மாக் கடையை அடைத்து உடைத்ததாக கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மட்டுமே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.

ஆடி அமாவாசைக்கு சதுரகிரி மலைக்குச் செல்ல வனத்துறை அனுமதி. ஆகஸ்ட் 8 முதல் 16 வரை தரிசனம் செய்ய வனத்துறை அனுமதியளித்துள்ளது.

தஞ்சை தமிழ்பல்கலைகழக 12வது துணை வேந்தராக க.பாஸ்கரன் பொறுப்பேற்றார்.