இன்றைய பரபரப்பு செய்திகள் 21.07.15

FlashNews-Logo

1.துருக்கி எல்லைப் பகுதியில் ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 35 மாணவர்கள் உயிரிழப்பு.

2.தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து டுவிட்டரில் அவதூறு செய்தியை பரப்பிய சுப்பிரமணிய சுவாமி மீது அவதூறு வழக்கு – முதல்வர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

3.எதிர்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு.

4.மோடி அரசை தேர்ந்தெடுத்தை நினைத்து மக்கள் வேதனைபடுகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்கவே மோடி அரசு முயல்கிறது – டெல்லியில் குஷ்பு பேட்டி.

5.சென்னை திருமங்கலத்தில் வருமானவரி பெண் அதிகாரி தீக்குளித்து தற்கொலை.

6.திமுக தலைவர் மது ஒழிப்பு பற்றி பேசியிருப்பது வரவேற்க்கதக்கது , மகிழ்ச்சியளிக்கின்றது.இனி தேர்தல்களத்திற்ககு வருகின்ற அனைத்து கட்சிகளும் இதை சொல்வார்கள் – வைகோ .

7.லலித் மோடிக்கு அமைச்சர்கள் உதவிய விவகாரம் – மோடி விளக்கமளிக்கக்கோரி மாநிலங்களைவில் ஆனந்த் சர்மா வலியுறுத்தல்.

8.கச்சத்தீவு அருகே ராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்.

9.மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் மகளிர் காங்கிரசார் போராட்டம்.

10.அவையை வேண்டுமென்றே முடக்குகிறார்கள் : அருண் ஜெட்லி.

11.தமிழக முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஆக. 27 ம் தேதி ஆஜராக நக்கீரன் கோபால், காமராஜ்க்கு சம்மன். சென்னை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஆதிநாதன் உத்தரவு.

12.எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கு. ஈவிகே எஸ். இளங்கோவன் ஆக. 21 ம் தேதி நேரில் ஆஜராக சம்மன்.

13.நடிகர்திலகம் சிவாஜி மணிமண்டபத்தை அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் உண்ணாவிரதம்.

14.தேனி போடிநாய்க்கனூர் பகுதியில் இருந்து கஞ்சாவை பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற கருப்பய்யாவை பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் போலீசார் கைது செய்து 6கிலோ கஞ்சாவயும் பறிமுதல் செய்தனர்.

15.சட்டவிரோத தொலைப்பேசி இணைப்பு விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமின் ரத்து கோரும் மனுவை விசாரணைக்கு பட்டியலிடக்கோரி சிபிஐ வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன் முறையீடு.

16.கோபி அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் பாரதிதாசன் வீதியில் மண்ணெண்யை ஊற்றி தாயும் ஒன்றை வயது மகளும் தற்கொலை பங்காளாபுதூர் காவல் துறையினர் தீவிர விசாரணை.

17.என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

18.ராமேஸ்வரம் அருகே சயனைடு குப்பி மற்றும் துப்பாகியுடன் 3 பேர் கைது.

19.நம் பாதுகாப்புத் துறையை மேம்படுத்தும் வகையில், ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் 200 சாப்பர் ரக ராணுவ ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கத் மத்திய அரசு திட்டம்.