இன்றைய செய்திகள்

FlashNews-Logo

புகார் அளிக்க சென்ற 80 வயது முதியவர் மீது போலீஸ் தாக்குதல் :

விருதுநகர்: நிலத்தகராறு பற்றி கிருஷ்ணன் கோயில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற 80 வயது முதியவர் முத்தையாவை போலீஸ் தாக்கியுள்ளது. படுகாயமடைந்த நிலையில் வத்திராயிறுப்பு அரசு மருத்துவமனையில் முதியவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடிநீர் வேண்டி பொதுமக்கள் சாலைமறியல் :

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். கொருக்குப்பேட்டை நேரு நகரில் குடிநீர் வேண்டி சாலைமறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்டோரை போலீசார் விரட்டியமுதல் முன்னாள் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகையிட்டனர். வெற்றிச்செல்வன் அலுவலகத்தை முற்றுகை செய்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அயோத்தியில் 2019க்குள் ராமர் கோவில் கட்டப்படும்?

பா.ஜ., எம்,பி., யான சாக்ஷி மகராஜ், அவ்வப்போது பரபரப்பான கருத்துக்களை கூறுபவர். சமீபத்தில் டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘அயோத்தியில் வரும் 2019க்குள் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி. பாபர் மசூதியில் இருந்து எடுக்கப்பட்ட ராமர் சிலை, புதிய கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படும். அங்கு மீண்டும் மசூதி கட்டம் பேச்சுக்கே இடமில்லை.’ என்றார்.