இங்கிலாந்தை சேர்ந்த பெண் தீவிரவாதி வெறியாட்டம் – இதுவரை மட்டும் 400 மேற்பட்டோரை கொன்று குவித்துள்ளார்.

Samantha_Lewthwaite_Interpol

ெள்ளை விதவை என அழைக்கபடும் சமந்தா லெவ்த்வெயிட் அல்-ஷபாப் இயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் தீவிரவாதி. இவரது வழிகாட்டுதலின் படி நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 400 மேற்பட்டோர், கென்யா மற்றும் சோமாலியாவில் போன்ற பகுதியில் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த 2005ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் 4 பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 52 பேர் வரை கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நான்கு பேரில் ஒருவரான சமந்தா லெவ்த்வெயிட், ஆப்பிரிக்காவிற்கு தப்பிச்சென்று அங்கு செயல்படும் அல்-ஷபாப் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொண்டு இரண்டாம் நிலைத் தலைவராக தன்னை பதவி உயர்த்தி கொண்டு உள்ளார்.

2013-ம் ஆண்டு கென்யா வணிக வளாகத்தில் 67 பேரை பலி கொண்ட தற்கொலைத் தாக்குதல், கடந்த மாதம் கரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் 148 பேர் உயிரிழக்கக் காரணமான தற்கொலைத் தாக்குதல் ஆகியவற்றின் மூளையாக சமந்தா செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

32 வயதாகும் சமந்தா நான்கு குழந்தைகளுக்குத் தாய் ஆவார். இவரது சதித் திட்டங்கள் மூலமாக சோமாலியா மற்றும் கென்யாவில் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு 400-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் வைத்து, இவர் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுவர்களையும், பெண்களையும் மூளைச்சலவை செய்து மனித வெடிகுண்டுகளாக்குவது, போதைப் பொருளை கொடுத்து சிறுவர்களை தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுத்துவது என பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வரும் இவரை சர்வதேச போலீஸ் அமைப்பு தேடி வருகிறது.