ரோமியோ ஜுலியட் ‘டண்டனக்கா’ பாடலில் புதிய திருப்பம்

ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் ரோமியோ ஜுலியட். இப்படத்தில் இடம்பெற்ற ‘டண்டனக்கா’பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.ஆனால், இந்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும், என்னை கொச்சைப்படுத்துவதாக உள்ளது என டி.ஆர் கூறினார். இந்நிலையில் தற்போது இப்பாடலின் டீசர் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப ஆரம்பித்து விட்டனர்.இதை வைத்து பார்க்கையில் டி.ஆர் சம்மதத்துடன் தான் இப்பாடல் படத்தில் இடம்பெற்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தை பார்த்து டி.ஆர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
Continue reading »