கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரம்

கடலோர காவல்படைக்குச் சொந்தமான விமானம் காணாமல் போன விவகாரத்தினால், ஆப்ரேஷன் “ஆம்லா’ பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடலோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பயங்கரவாத தாக்குதலை தடுக்கும் வகையிலும், தமிழகம், புதுச்சேரியில் இவ்வொத்திகை மேற்கொள்ளப்படுவது வழக்கம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆப்ரேசன் ஆம்லா ஒத்திகை 36 மணி நேரம் நடப்பதாக இருந்தது. தற்போது ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 13 மாவட்ட எஸ்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. பின்னர் ஆப்ரேசன் ஆம்லா 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. […]
Continue reading »