HTC One M9 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான புதிய தகவல்கள்

HTC-One-Concept-Ashik-Empro-Red-624x351

அப்பிள் மற்றும் சம்சுங் நிறுவனங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்யும் HTC நிறுவனம் HTC One M9 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இந்நிலையில் இக்கைப்பேசி தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 5 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Eight Core 64-bit Qualcomm Snapdragon 810 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் Android 5.0 Lollipop இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய இக்கைப்பேசியில் 20 மெகாபிக்சல்களைக் கொண்ட பிரதான கமெரா, 13 மெகாபிக்சல்களைக் கொண்ட வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதுவரை விலை தொடர்பான தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் இவ்வருடம் இடம்பெறும் Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.