தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டம் குறித்து ‘டாஸ்மாக்’ அதிகாரிகள் தீவிர கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் வலுத்து வருவதால், தமிழக அரசு மதுக்கடைகளை குறைக்க திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதற்காக நேற்று முன்தினம்(வியாழக்கிழமை) இரவு ‘டாஸ்மாக்’ மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதை நடைமுறைப்படுத்துவதற்கு அந்தந்த மாவட்ட மேலாளர்கள் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், அதற்கான பணிகளை செய்து முடிக்க அவர்களுக்கு ஒரு சுற்றறிக்கை […]
Continue reading »