Category Archives: செய்திகள்

போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

22dc_STL-PIC_tn_22_1694260g

நேரம் : 8.20pm சென்னை: சென்னை, போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் 2வது தளத்தில் உள்ள பொருள் சேமிப்பு அறையில் தீப்பிடித்துள்ளது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Continue reading »

பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை,

photo_2015-05-17_23-18-23

நியூயார்க்: பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை, குறைந்த விலையில் உருவாக்கி, 13 வயதான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா கிளாரா நகரில், 8ம் வகுப்பு படித்து வருகிறான் சுபம் பானர்ஜி. 13 வயதான பானர்ஜி, படிப்பில் படு சுட்டி. அதேசமயம், அவனுடைய தந்தை நெய்லின் உதவியுடன், கணினி தொழில் நுட்பத்திலும் ஆர்வம் காட்டி வருகிறான். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவின்போது, பானர்ஜி கலந்து கொண்டான். அப்போது, பார்வையற்றோர் பயன்படுத்தம் பிரெய்லி பிரிண்டரின் விலை, […]

Continue reading »

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

DMKDMDK

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11ஆண்டு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று பகல் 10:53 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கருணாநிதிக்கு விஜயகாந்த் சால்வை அணிவித்தார். பின்னர் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் எனறு இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Continue reading »

இணையதள சேவையில் மக்களுக்குக் கட்டுப்பாடு கூடாது…

vikho

சென்னை: இணையதள சேவைகள் மக்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கிடைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன.

Continue reading »

பெண்களை கடத்தி ஆபாச படம் எடுத்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் ஐகோர்ட் விடுவிப்பு

dr-prakash

பெண்களை கடத்தி ஆபாச படம் எடுத்த செக்ஸ் டாக்டர் பிரகாஷ் ஐகோர்ட் விடுவிப்பு சென்னை: பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி, அதை படம் எடுத்து, இன்டர்நெட்டில் வெளியிட்ட வழக்கில் செக்ஸ் டாக்டர் பிரகாஷுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை குறைத்து அவரை சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க உத்தரவிட்டது. சென்னை அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தியவர் எலும்பு மூட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரகாஷ். மருத்துவமனைக்கு வரும் பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக படமெடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக இவர் மீது புகார் எழுந்தது. புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் கணேசன் […]

Continue reading »

சென்னை கோடம்பாக்கம், நந்தனம் போன்ற

social_security_taxation_and_healthcare_in_chennai-624x304

சென்னை கோடம்பாக்கம், நந்தனம் போன்ற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் தீ போல வாட்ஸப்பில் பரவிவருகிறது. நந்தனத்தில் மெட்ரோ ரயில் வேலை நடைபெறுவதால் ஏற்பட்ட அதிர்வாம். தற்போதுப்பாக்கி நந்தனம் பகுதியில் சில தனியார் தொலைக்காட்சிகள் செட்டப் பேட்டி எடுத்து வருகிறார்கள்.

Continue reading »

நிலஅதிர்வால் இந்தியாவில் 34 பேர் பலி

IMG-20150425-WA0016

நிலஅதிர்வால் இந்தியாவில் 34 பேர் பலிஇந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 11.41 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அவற்றின் அதிர்வுகள் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டது.  சென்னையிலும் நில அதிர்வு உணரப்பட்டது.நில அதிர்வால் ஏற்பட்ட பீதியில் ஓடும்போது நெரிசலில் சிக்கியும், நிலச்சரிவில் சிக்கியும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் என மேற்கு வங்காளத்திலும் 3 பேர் பலியானார்கள்.   உத்தரபிரதேசத்தில் 8 பேர் பலியானார்கள் பீகாரில்  23 பேர் பலியானார்கள்

Continue reading »
1 14 15 16