Author Archives: admin

உன் திமிருக்கு அழகென்று பெயர் !

images

  அழகென்று பெயர் – தமிழுக்கு மட்டுமல்ல உன் திமிருக்குந்தான் ! தமிழ் உனக்குள் திமிர் தந்ததோ , இல்லை உன் திமிரே தமிழுக்கும் அழகானதோ ? என் திமிருக்குள் அழகான பாரதியே ! என் அழகுகுக்குள் திமிரான பாரதியே ! உன் அழகுக்குள் மட்டுமல்ல, உன் திமிருக்குள்ளும் ஒட்டிக்கொள்ள ஆசையெனக்கு ! அழகான தமிழ்கொண்டு நேசிக்கிறேன் திமிராகத் திரியும் உன் அத்தனையும்! முன்கொபிதான் என்றாலும் முட்டாளல்ல , நெஞ்சை நிர்மிர்த்தி நடைபோடும் வணங்காமுடி நீ ! நெஞ்சுக்கும் காதலென்றால் வணங்கும் முடி நீ! […]

Continue reading »

எட்டாக்கனியாகிடுமோ !

agacdalindanar

எட்டாக்கனிக்கு ஏங்குகிறாய்! எட்டும் போது நீ தூங்குகிறாய்! ஏளனமோ உனைத் தாங்கும் ! ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ ? எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ ! தமிழ் எட்டாக்கனியாகிடுமோ !

Continue reading »

அமிழ்தெங்கே!

தமிழ்

விரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக!

Continue reading »

பாதியிலே கசந்து போச்சோ?

11072002_874541512606573_4439000920993596693_n

நாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய! உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ? புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் ? புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக! திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ?

Continue reading »

நட்போடு நான்! நண்பர்களாய் நாம்!

10891470_869128489814542_8443880690172035496_n

கூடிக்கிளைக்கும் காமமில்லை, கூடவேத்திரியும் காதல் கேட்டேன்! குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல! காமத்துக்கரசியுமல்ல! காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால்! எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ! என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ! விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க! வித்தையல்ல நீ, வியந்து பார்க்க! விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன? சாய்ந்து கொள்ள தோளாய் இரு! சரியும் போது தோழனாய் இரு! முழுவதுமா கேட்டேன் உன்னை! முப்பத்து மூன்று மட்டும் தா!

Continue reading »

டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்

article-2309018-194B2798000005DC-395_634x311

புதுடெல்லி, மே 26:  டில்லி உயர்நீதி மன்றம்,  ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் […]

Continue reading »

மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்.

alex

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார். என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் ! நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.! என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.! தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார். அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!! தலைசிறந்த […]

Continue reading »

மேல்மூறையீடு செய்ய திமுக முடிவு

dmk-president-karunanidhi

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து,திமுக உச்சநீதிமன்ற மேல்மூறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.திமுக மாவட்டசெயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்,நடைப்பெற்றது. சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்தும், கழகத்தினர் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கபட்டது.குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் ”செயலற்றும் இருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள்” குறித்து மக்களிடையே கொண்டு […]

Continue reading »
1 2 3 4 6