Monthly Archives: June 2015

சர்க்கரைநோயினால் ஏற்படும் புண் குணமாவதற்கு வழிமுறைகள்:!!!

toes

மா இலை, அத்தி இலை, ஆகியவற்றை எடுத்து கொண்டு நன்கு அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து மண் பாத்திரத்தில் பாதியாக காய்ச்சி கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற துணியில் வடிகட்டி கொள்ள வேண்டும். தினமும் காலை உணவுக்கு முன் 50 மில்லியும், இரவு உணவுக்கு பிறகு 50 மில்லியும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் புண்கள் குணமாகும். உடலில் ஏற்படும் தீராத புண் மீது அத்தி இலை, வேப்பிலை, மஞ்சள் பொடி ஆகியவற்றை எண்ணெயில் கலந்து இரவு தூங்கபோகும் முன் புண் […]

Continue reading »

01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் ….

helmet

01/07/2015 முதல் ஹெல்மெட் கட்டாயம் …. ஓட்டுநர், பயணிப்பவர் இருவருக்கும்…. மீறினால் அனைத்து ஆவணங்கள், ஓட்டுநர் உரிமம் பறிமுதல்…. ஐ.எஸ்.ஐ. சான்று ரசீது காண்பித்தால் மட்டும் விடுவிப்பு…. என்று பொது மக்களுக்கு தமிழக உள் துறை முதன்மைச் செயலாளர் அறிவித்துள்ளார்

Continue reading »

லலித்மோடி விவகாரத்தில் 7 கேள்விகள்: மத்திய அரசை உலுக்கும் சிதம்பரம்

lalit

சுஷ்மா சுவராஜை லலித்மோடி தொடர்பு கொண்டது பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறி உள்ளார். இந்த விவகாரத்தில் 7 கேள்விகளைக் கேட்டு, அதற்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கோரி உள்ளார். லலித்மோடி-சுஷ்மா சுவராஜ் விவகாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களும் உதவியதாக லலித்மோடி ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார். குறிப்பாக, சிதம்பரத்தின் மீது அவர் சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். கடிதங்களே சாட்சி: இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த […]

Continue reading »

கலாநிதி மாறன் கடிதத்திற்கு பதில் தர முடியாது… நீதிமன்றத்தில் சந்திக்க தயார்… உள்துறை அமைச்சகம் அதிரடி

Kalanithi Maran2LL_0_0_0_0_0

சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரடியாக தலையிட வேண்டும் என கலாநிதி மாறன் எழுதிய கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமங்களை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன்பு, அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் […]

Continue reading »

வந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:

modi-app

நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் […]

Continue reading »

கடந்த ஆண்டில், நாட்டின், சினிமா, விளையாட்டு, எழுத்தாளர்கள் போன்ற முன்னணி பிரபலங்கள் பட்டியலை, பிரபல, ‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ajith13214_m

அதில், அதிகமாக சம்பாதித்து, ரஜினிகாந்த், விஜய்யை பின்னுக்கு தள்ளி, ‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும், அஜித்குமார் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் இந்த பிரபலங்கள் சம்பாதித்த பணம், அவர்களின் மொத்த பண தரவரிசை மற்றும் புகழின் அடிப்படையில், ஒன்று முதல், 100 வரை பட்டியலிடப்பட்டுள்ளனர். முதல் இடத்தில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளார். அவர், கடந்த ஆண்டில், 244 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்; பணத்திலும், புகழிலும் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில், அமிதாப் பச்சன் உள்ளார். அவர், 197 கோடி ரூபாய் […]

Continue reading »

டெல்லியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா

city_bus_cctv_b_13052013

துடெல்லி: டெல்லியில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, […]

Continue reading »

மௌனம்ரவி — கதாநாயகனாகும் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின்

raghava

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்ற “ சில்லாட்ட பில்லாட்ட “ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார். நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவா லாரன்ஸ் அவர்களே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார். நடனம் மட்டும் இல்லாமல் six pack உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் […]

Continue reading »

பிஎஸ் என் எல் நெல்லை தொலை தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் முருகானந்தம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

BSNL

பிஎஸ்என்எல் தனது அனைத்து 2ஜி மற்றும் 3 ஜி பிரிபெய்டு செல்போன் வாடிக்கையாளர்களுக்கும் இன்று (15ம் தேதி) முதல் ரோமிங் கட்டணத்தை முற்றிலு மாக தள் ளு ப டி செய் துள் ளது. இத னால் இந் தியா முழு வ தும் ரோமிங் கில் செல் லும் அனைத்து 2ஜி மற் றும் 3ஜி பிரி பெய்டு செல்போன் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரோமிங் கட்டணங்களின்றி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். ஏனைய விதிமுறைகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு […]

Continue reading »

புதிய சாதனை — ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

australia

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ பதிவு இணையங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது

Continue reading »
1 2 3 4 5 6 11