Monthly Archives: May 2015

இன்றைய செய்திகள்

TamilNadu_Logo

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர் தலால் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட எந்தத் தடையும் இல்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரி வித்தார். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மெட்ரோ ரயில் சேவையை தொடங்கலாம் என்றும் அவர் கூறினார். சென்னை ஆர்.கே.நகர் தொகு திக்கு ஜூன் 27-ல் இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் சென்னை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் நடத்தை […]

Continue reading »

தல 56′ (தற்காலிக தலைப்பு)

shrutihaasan-ajith

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ‘தல 56′ (தற்காலிக தலைப்பு). இதில் அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்க அவரது தங்கையாக மற்றொரு முன்னணி நடிகையான லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். குறுகிய காலத்திலேயே தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நாயகியாக உருவெடுத்துள்ள இவர் திடிரென அஜித்துக்கு தங்கையானது திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள லக்ஷ்மி மேனன், ” அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பது எனது கனவு. எனவே அது தங்கை வேடமாக இருந்தாலும் ஓகே தான்” […]

Continue reading »

எட்டாக்கனியாகிடுமோ !

agacdalindanar

எட்டாக்கனிக்கு ஏங்குகிறாய்! எட்டும் போது நீ தூங்குகிறாய்! ஏளனமோ உனைத் தாங்கும் ! ஏற்றம் பெற்றால் உன் மனம் ஏங்கும் – நான் ஏற்றம் பெற்றால் மீண்டும் உன் மனமேங்கும். எட்டுத்திசை சுற்றினாலும் – எந்தனைப்போல் யாருமுண்டோ ? எட்டியிறுந்தால் என்றைக்குமே எட்டாக்கனியாகிடுமோ ! தமிழ் எட்டாக்கனியாகிடுமோ !

Continue reading »

இயற்கை மருத்துவம் – பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்?

இயற்கை மருத்துவம்

பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்? திருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 – 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள் காரணமாக இருந்தார்கள். ஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ […]

Continue reading »

கறிவேப்பிலை

curry-leaf-plant-murraya-koenigii--[3]-153-p

மிக மலிவாக கிடைக்கும் கருவேப்பிலை, ருசிக்காவும், உணவில் மணம் கூட்டவும் சேர்க்கப்படுகிறது. உணவு உண்ணும் போது, கருவேப்பிலையை ஒதுக்கி வைக்கத் தான் பலர் எண்ணுகின்றனர். ஆனால், அந்த கருவேப்பிலையில் கிடைக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம். கருவேப்பிலை, சத்து நிறைந்த உணவுப்பொருள். இதில், 63 சதவீத நீர், 6.1 சதவீத புரதம், ஒரு சதவீதம் கொழுப்பு, 4 சதவீதம் தாது உப்பு, 6.4 சதவீத நார் சத்து, 18.7 சதவீத மாவு சத்து உள்ளன. சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, தாமிரம், கந்தகம் மற்றும் குளோரின், ஆக்ஸாலிக் […]

Continue reading »

அமிழ்தெங்கே!

தமிழ்

விரிக்கலயம் குமிழ்கலசம் என தேடி திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! அறியா திசைகளிலும், புரியா மொழிகளிலும் நிதம் தேடித்திரிகின்றோம்! அமிழ்தெங்கே , அமிழ்தெங்கே  என்று! தமிழ் என்ற அழகொன்று போதாதோ, அமிழ்துக்கும் அமிழ்தமாக!

Continue reading »

பாதியிலே கசந்து போச்சோ?

11072002_874541512606573_4439000920993596693_n

நாடகப்பாவையல்ல நான் நாளெல்லாம் மெருகாய்த்திரிய! உந்தன் பார்வை மாறிப்போனால் என் தோற்றம் மாறிடுமோ? புரிந்துகொண்டு வாழ எண்ணி புரிதலின்றி போனதுமேன் ? புதையல்ல நானுனக்கு தேடித்தேடி தொலைந்து போக! திறந்து வைத்த புத்தகம் நான் பாதியிலே கசந்து போச்சோ?

Continue reading »

நட்போடு நான்! நண்பர்களாய் நாம்!

10891470_869128489814542_8443880690172035496_n

கூடிக்கிளைக்கும் காமமில்லை, கூடவேத்திரியும் காதல் கேட்டேன்! குவியத்தில் வைத்துன்னை கட்டிப்போட, காரியதரிசியுமல்ல! காமத்துக்கரசியுமல்ல! காமத்துக்குதான் பாலுண்டு, காதலுக்கேது ஆண்பால்,பெண்பால்! எதுவந்தாலும் துணிந்து நிற்கும் ஆளுமை நீ! என் வாழ்க்கைப் படகில் தவிர்க்க முடியா மாலுமி நீ! விந்தையல்ல நான், ஆய்ந்து பார்க்க! வித்தையல்ல நீ, வியந்து பார்க்க! விலகி நின்று நோட்டம் பார்க்க தேவையென்ன? சாய்ந்து கொள்ள தோளாய் இரு! சரியும் போது தோழனாய் இரு! முழுவதுமா கேட்டேன் உன்னை! முப்பத்து மூன்று மட்டும் தா!

Continue reading »

டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்

article-2309018-194B2798000005DC-395_634x311

புதுடெல்லி, மே 26:  டில்லி உயர்நீதி மன்றம்,  ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் […]

Continue reading »
1 2 3 4 6