12 நாட்கள் போராட்டத்திற்க்கு பிறகு செம்மர கடத்தல் டிஎஸ்பி கைது……………..

red wood

காண்டீபன்.எஸ்.ஜெ செம்மர வழக்கில் தேடப்பட்டுவந்த கலால் டிஎஸ்பி 12 நாட்களுக்கு பிறகு இரு மாநில எல்லையில் சுற்றி வளைத்து கைது. 8 மணிநேர விசாரனையில் பல திடுக்கிடும் தகவல். நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைப்பு. டிஎஸ்பி யை ஊடகத்தில் இருந்து காப்பாற்றுவதில் டிஎஸ்பிகள் உறுதி.
வேலூர் மாவட்டம், மாதனூர் அருகே கடந்த மாதம் 27 ஆம் தேதி சின்னபயன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மர கடத்தல்காரர்கள் பிண்ணனியில் இருப்பது தெரிய வந்தது. பின்னர், இது தொடர்பாக வேலூர் அடுத்த அலுமேலுரங்காத்தை சேர்ந்த நாகேந்திரன், ஜோதிலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரனையில் வேலூர் மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் தலைமறைவாகிய கண்காண்ப்பாளரை காவல்துறையினர் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆறு தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில்டிஎஸ்பி, இன்று தமிழக ஆந்திர எல்லைபகுதியான காட்பாடி அருகே சுற்றி வளைத்து பிடித்தது காவல்துறையினர் கைது செய்தனர்.பின்னர், டிஎஸ்பி யை பரதராமி காவல் நிலையத்தில் வைத்து 8 மணிநேரம் காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரி விசாரனை மேற்கொண்டார். இதில் டிஎஸ்பி தங்கவேலு பல முக்கிய புள்ளிகளின் பெயர்களை வாக்குமூலத்தில் அளித்துள்ளார்.

அவர்கள் விரைவில் பிடிபட உள்ளனர். இவரை புகைபடம் எடுப்பதற்க்காக காவல் நிலையம் வாயிலில் காத்திருந்த செய்தியாளர்களுக்கு காண்பிக்கப்படாமல் அவரை பரதராமி காவல்நிலையத்தின் மின்விள்க்குகள் அணைக்கப்பட்டு கள்ளதனமாக பின்புறம் அழைத்து சென்று டிஎஸ்பி கணேஸனின் வாகனத்தில் ஏற்றிகொண்டு சென்றனர். பின்னர் ஆம்பூர் அருகே வகனத்தில் இருந்து கேடி டிஎஸ்பியை பேடி டிஎஸ்பிகள் இறக்கி நீதிபதியின் வீட்டிற்க்கு ஆட்டோவில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆம்பூர் ஓஏஆர் திரையரங்க நிருத்தத்தில் செய்தியாளர்களுக்கே தண்ணிகாட்டியுள்ளார்.பின்னர் கஸ்பாவில் வைத்து கோடிகளை கண்ட டிஎஸ்பி யை சாதாரண இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்று நீதிபதி யின் முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஆனந்த்ராஜ் உத்தரவிட்டார்.

மீண்டும் அங்கு காத்த்திருந்த செய்தியாளர்களுக்கே தெரியாமல் டிஎஸ்பியை ஜெட்ஜ் வீட்டின் பின்புரத்தில்கக்கூஸ் வழியாக அழைத்து சென்று ஆட்டோவில் ஏற்றிகொண்டு ஆம்பூரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளி நிறுத்திவைக்கப்பட்டிருந்த போலீஸ்வாகனத்தில் அழைத்துகொண்டு வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்க வந்தனர்.
அங்கும் காத்திருந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை டிஎஸ்பியை புகைபடமோ ஒளிபடமோ எடுக்கவிடாமல் விடாப்பிடியாக டிஎஸ்பி மதிவாணன் தடுத்து நிறுத்தி தங்கவேலுவை சிறையில் அடைத்தனர். அப்போது நான் காவது தூணை நிலை நாட்ட வீருகொண்டு எழுந்த இரவு செய்தி சிங்கங்கள், சிறையோ,திரையோ.. கிழித்து கொண்டு உள்ளே புகுந்தோம், இதில் நாளேடு துறையை சேர்ந்த நண்பர்கள் இருட்டிலும் கருப்பு கருவியைகண்ணுக்கு நேராக வைத்துகொண்டு மின்னல் வெட்டை ஏற்படுத்தி, பொட்டை டிஎஸ்பி யின் பிடறியை படம்பிடித்தனர். இது எடுக்கப்பட கூடாது என தடுத்து நிறுத்திய காவல் துறை இது தவறு என எங்களுக்கே சுட்டி காட்டியது. தவற்றை எல்லாம் செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் காவல் துறையே, சரி விடுங்க அவரை, அடுத்து.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம்பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வெளியில் வந்த நமக்கு மர்ம கார் ஒன்றை கண்டோம், விசாரிக்க முன்னே சென்றோம்,

காரில் இருந்த பணம் பல படைத்தும் பதறி அடித்து ஓடினான்,

செய்தி:-
டிஎஸ்பி கைது செய்யப்பட்டதில் இருந்து அவரை கண்காணிக்க பரதராமி காவல்நிலையம், ஆம்பூர் நீதிமன்றம் வேலூர் ஆண்கள் மத்திய சிறை ஆகிய இடங்களில் வண்டி க்கு முன்பக்கமும், பின்பக்கமும் எண் தகடு நீக்கப்பட்டு நான்கு சொகுசு கார்கள் கண்காணித்து வந்தது. இது மேலும் டிஎஸ்பி மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதில் பல பெரும் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக நிஜமானது.

 

12 நாட்கள் போராட்டத்திற்க்கு பிறகு செம்மர கடத்தல் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரட்தில் பெரும்பரப்பரப்பாக பேசப்பட்டுவருகிறது.