வந்துவிட்டது நரேந்திரமோடி ”ஆப்” : இனி பிரதமருடன் நேரடியாக கலந்துரையாடலாம்:

நரேந்திர மோடி ஆப் என்ற பெயரில் புதிய செயலியை மோடி துவக்கியுள்ளார்.இதன் மூலம் மோடியிடமிருந்து மொபைல் வாயிலாக தகவல்கள் மற்றும் இமெயில்கள பொதுமக்கள் பெறலாம்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி வருவதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். அரசு நிர்வாகத்தில் பொது மக்களும் பங்கு பெற வேண்டும், ஆலோசனைகள் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரதமர் மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் எனது அரசு என்ற புதிய இணையதளத்தை துவங்கினார். இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நரேந்திர மோடி என்ற பெயரில் புதிய செயலி துவங்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு வசதி கொண்ட மொபைல்களில் நரேந்திரமோடி செயலியை டவுன்லோடு செய்து தேவையாக தகவல்கள், இமெயில்கள் மற்றும், மான்கிபாத் வானொலி பேச்சுக்களையும் எப்போதும் எந்நேரமும் பெறலாம். மேலும் பொதுமக்கள் தங்களது கருத்துக்கøளையும் தெரிவிக்கலாம். பிரதமருடன் கலந்துரையாடலாம்.
தவிர அரசின் சாதனைகள் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்கள் தொடர்பாக அப்டேட் செய்யப்பட்டிருப்பதையும் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அந்த செயலியில் வசதிகள் உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவீட்டரில் மோடி தெரிவித்துள்ளார். இந்த மோடியில் இந்த புதிய தொழில்நுட்ப முறைக்கு பல தரப்பிலும் வரவேற்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த அணுகுமுறையை டுவீட்டர் கணக்கில் தொடர்பர்கள் வெகுவாக பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.