ரூ.4,000 க்கும் குறைவான விலையில் 4 ஜி ஸ்மார்ட்போன்கள்!! அடுத்த கோதாவில் இறங்குகிறது ரிலையன்ஸ்!!!

reliance-4G-logo-jio

மும்பை : வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் ரூ.4 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் 4G சேவையை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நெட்வொர்க் கவரேஜை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.

தொலைதொடர்பு துறையில் 4-ம் தலைமுறை தொழில்நுட்பமான 4G சேவையை வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் துவங்க இருப்பதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.

மேலும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் ரூ.4,000 க்கும் குறைவான விலையில் செய்திகள், தொலைக்காட்சிகள், வீடியோக்கள் உள்பட ஏராளமான வசதிகள் கொண்ட 4G சேவையை வழங்கும் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கேபிள் சேவைகளில் ஈடுபட ரிலையன்ஸின் தொலைத் தொடர்புப் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும்,. பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து வங்கிச் சேவைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாகவும் முகேஷ் அம்பானி கூறினார்.