யார் குற்றம் – விளம்பரத்தில் நடித்தவர்கள் மட்டுமா குற்றவாளி?

Amirtha

மேகி நூடல்ஸ் உடலுக்கு ஆபத்தானது எனவே அமிதாப், மாதுரி , ப்ரீத்தி உள்ளிட்ட நடிகர் நடிகையருக்கு நோட்டிஸ் அனுப்பப் பட்டு கைது வாரண்ட் பிறக்கும் நிலை உள்ளதாக அனைத்து ஊடகங்களீலும் செய்தி வருகிறது! முகனூலிலும் கூட அமிர்தா காலேஜ் குறித்த விளம்பரத்தில் ராதிகாவை விமர்சித்து வருகின்றனர்!

நடிகர் நடிகைகளூக்கு சமூகப் பொறுப்பு உள்ளது ! அவர்களை நேசிக்கும் மக்கள் அவர்களின் விளம்பரத்தால் வீழ்ந்து விடுவது உண்மை ! அவர்கள் தவறான பரிந்துரை செய்வது தவறு என்றாலும் அவர்களுக்கு மட்டும் தான் சமூகப் பொறுப்பு உள்ளதா? மற்றவர்களுக்கு இல்லையா?

இதை ஊடகங்களில் விளம்பரம் செய்து பல கோடி மக்களீடம் சேர்க்கும் ஊடகங்களுக்கு பொறுப்பு இல்லையா? அதில் பிரச்சனை வந்தால் அதையும் விவாதாமாக்கி காசு பார்க்கும் உங்களை கைது செய்ய வேண்டமா?

மேலும் இதற்கு அனுமதி வழங்கிய இந்திய உணவுத் தரக் கட்டுப்பாடு கழக அதிகாரிகள் தண்டிக்கப் பட வேண்டாமா?
இதை விட மோசமான ஆபத்தை விளைவிக்கும், புகையிலை, போதைப்பாக்கு, மது உள்ளிட்ட பொருட்களை அனுமதிக்கும் அரசுக்கும் , அதை ஆளுகின்ற வர்கத்துக்கும் தண்டனை இல்லையா?

தயாரிக்கும் இடத்தில் தடுப்பதை விட்டு விட்டு தயாரித்தவனுக்கு தண்டனை வழங்குவதை விட்டு, அனுமதி வழங்கிய அரசு அதிகாரிகளை விட்டு விட்டு நடித்தவன், விற்றவன், வாங்கியவன் , பயன் படுத்துதுபவனை தண்டிக்கும் கேடுகெட்ட சட்டங்களை வைத்து எந்தத் தீமையையும் தடுக்க முடியாது!

பான் பராக் தயாரிப்பவனை விட்டுவாங்களாம்!
விற்கிறவனைப் பிடிப்பாங்களாம்!

சிகரெட் தயாரிப்பவன் விற்பவனை விட்டுடுவாங்களாம்!
பொது இடத்தில் புகைப் பிடிப்பவனை பிடிப்பாங்களாம்!

பிளாஸ்டிக் பை தாயாரிக்கிறவனை விட்டுடுவாங்களாம்!
கடையில் வைத்து சில்லறையில் விற்பவனை பிடிப்பாங்களாம்!

மதுவை அரசாங்கமே தயாரித்து விற்பாங்களாம்!
அதைக் குடிச்சிட்டு வண்டி ஓட்டினா பிடிப்பாங்களாம்!

கட்டிடம் இடிந்தால் கட்டினவனை பிடிப்பங்களாம்!
ஆனால் காசு வாங்கிக் கொண்டு அனுமதித்த அதிகாரிகளை விட்டுவாங்களாம்!

செம்மரத்தை கடத்துறவனை விட்டுடுவாங்களாம்!
கூலிக்கு மரம் வெட்டுறவனை சுட்டுருவாங்களாம்!

என்ன சட்டமோ!!!!!!!!!!!!!