மேல்மூறையீடு செய்ய திமுக முடிவு

dmk-president-karunanidhi

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து,திமுக உச்சநீதிமன்ற மேல்மூறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது.திமுக மாவட்டசெயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில்,நடைப்பெற்றது. சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுகவின் மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்தும், கழகத்தினர் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில், விவாதிக்கபட்டது.குறிப்பாக கடந்த நான்காண்டுகளில் ”செயலற்றும் இருக்கும் அதிமுக அரசின் செயல்பாடுகள்” குறித்து மக்களிடையே கொண்டு சேர்க்க மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடபட்டுள்ளது.

கருணாநிதியை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மதுரை கூட்டம்

நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டம் திமுக தலைவரை மிகவும் உற்சாக படுத்தியுள்ளது என்றே சொல்லாம். அதன் காரணமாக உடல்நிலை சரியில்லாத போதும் இன்று நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கருணாநிதி கலந்துகொண்டார் யென்று கூறப்படுகிறது. நேற்று மதுரையில் திரளாக கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தை பற்றி மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.திமுக இளைரணி சார்ப்பில் தயாரிக்கபட்ட “செயலிழந்த அரசாங்கம் தேவைதானா? முன்னேற்றம் முடங்குவது நியாயம் தானா ? புத்தகம் அனைவருக்கும் வழங்கபட்டது. அந்த புத்தகத்தில் அதிமுக அரசின் நான்காண்டு காலத்தில் எடுக்கபட்ட தவறான முடிவுகளும் , அதனால் தமிழகம் நிதிநிலைமையில் சிக்க தவித்து இருப்பது புள்ளிவிவரமாக கொடுக்கபட்டுள்ளது. இந்த தகவல்களை மக்களிடையே சேர்ககபடவேண்டும் இக்கூட்டத்தில் வலியுறுத்தபட்டது.

ஓரு லட்சம் கோடி ரூபாய் இழப்பா?

மேலும் அந்த புத்தகத்தில்,அதிமுக அரசின் தோல்விகள், குறித்து ஒரு குற்றப்பத்திரிக்கை என்னும் பகுதியில், அணுக்களை பிளக்க உதவும் கனிமப்பொருள்களில் ஒன்றான மோனோசைட் எடுக்கும் உரிமை தனியாருக்கு வழங்கபடுவதில்லை, ஆனால் வி.வி மினரல்ஸ் என்கிற நிறுவனத்துக்கு (அதிமுகவிற்கு வேண்டிய வைகுண்டராஜன் நிறுவனம்)சட்டவிரோதமாக மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனால் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட பட்டள்ளது. இப்படி அரசின் ஒவ்வொரு தவறான அணுகுமுறைகளை பட்டியல் இட்டு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டுமென மாவட்ட செயலாளர்க்ளுக்கு தலைமை உத்திரவிட்டுள்ளது.

மேல்மூறையீடு செய்ய அவகாசம் உள்ளது. ஆர்.ஸ் பாரதி பேட்டி

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யபடும் உறுதியாக தெரிவிக்கபட்டுள்ளது, கூட்டம் முடிந்த பிறகு மகிழ்ச்சியுடன் வெளியில் வந்த திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களை சந்திக்க வில்லை. கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.ஸ்.பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக கழகம் சார்ப்பில் விரைவில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திமுக சார்ப்பில் அன்பழகன் மேல்மூறையீடு செய்வார். மேல்மூறையீடு செய்ய வேண்டுமானால் தீர்ப்பு வெளிவந்து 90 நாட்களுக்குள் செய்யபடவேண்டும். மேல்மூறையீடு இன்னமும் கால அவகாசம் இருப்பதால், விரைவில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யபடும் என்றும்,ஆனால் தற்போது வரை கால நிர்ணயம் இதுவும் செய்யபடவில்லை என்றார்.மதுரையில் நடைப்பெற்ற கூட்டத்தை போன்று பிற மாவட்டங்களிலும் கூட்டம் நடத்த திமுக தயராகிவருகிறது