மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா?  

vijayakanth

அஜினமோட்டோ அதிகம் உள்ளதாக மேகி நூடுல்சை தடை செய்துள்ள தமிழக அரசு அந்த ரசாயன பொருளை உற்பத்தி செய்யும் ஜப்பான் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கலாமா? என விஜயகாந்த்  கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதால் மேகி நூடுலுஸுக்கு தடை விதிக்கும் ஜெயலலிதா விபத்துக்கள், உயிரிழப்புகள், மற்றும் குற்றச் செயல்களுக்கு காரணமான மதுக்கடைகளை மூட முன்வருவாரா? என விஜயகாந்த் வினவினார்.

மேலும் அவர்  கூறியதாவது:

இருந்து தண்ணீர் திறக்காததால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் விவசாயிகள் குறுவைக்கு உயிர்த்த நீர் கேட்டுள்ள நிலையில் பணம் கொடுத்தால் போதும்  என்ற மனநிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா அறிவித்துள்ள ஏக்கருக்கு ரூ.315 நிவாரணம் யானைப் பசிக்கு சோளப் பொறியாகும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

மற்றும்,

10 மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டங்கள் தற்போது புதியன போல துவங்கப்படுகிறது என்று கூறியுள்ள அவர் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்டும் திட்டம் நிறைவேற்றப்படாததற்கு கண்டித்துள்ளார். மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை பார்க்கும் போது எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருவதாக விஜயகாந்த் கூறினார்.