முன்னால் தென்னாபிரிக்க டென்னிஸ் வீரர் பாப் ஹெவிட்டிற்கு , கற்பழிப்பு வழக்கில் சிறை தண்டனை!

75 வயது மதிக்கத்தக்க ஹெவிட், தன்னிடம் பயிற்சிக்கு வந்த இரண்டு பெண்களை கற்பழித்ததாகவும் மற்றும் ஒரு பெண்ணின் மீது பாலியல் தாக்குதல் புரிந்தாதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில், அவர் மீதான குற்றம் நிருபணம் செய்யப்பட்டது.
தண்டனை வழங்குவதற்கான ப்ரேடோரியாவில் நடந்த விசாரணையின்போது ஹெவிட்டின் மனைவி தன் கணவரின் வயித்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் கருணை அடிப்படையில் சிறை தண்டனை வழங்க வேண்டாம் என கெஞ்சினார். ஹெவிட்டும் தனக்கு உடல் நிலை சரியில்லை என நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
விசாரணைகளுக்கு பிறகு, நீதிபதி பெர்ட் பெம் விசாரணையின் போது ஹெவிட் தன குற்றத்திக்காக எந்த வருத்தமும் காட்டவில்லை என விமர்சனம் செய்தார்.
மூன்று பாதிக்கப்பட்ட பெண்கலளித்த சாட்சிகளிலும் நிறையும் ஒற்றுமைகள் இருப்பதாகவும், இது ஹெவிட்டின் நடத்தை பற்றி நன்கு விளக்குவதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் விசாரணையில், ஹெவிட் தன்னை பாலியில் துன்புரத்தல் செய்த போது, தனக்கு 12 வயது என தெரிவித்தார். மேலும் அவர், குற்றவாளிகளின் வயதை கருத்திலெடுக்காமல் , அவர்களின் குற்றத்திற்கான தண்டனை வழங்கப்பட்டே தீரவேண்டும் என்று கூறினார்.
6 வருட சிறை தண்டனையுடன், ஹெவிட்டிற்க்கு அபராத தொகையும் அறிவித்ததாக பிபிசி யின் நோம்சா மசெகோ, தெரிவித்தார். இந்த தொகையை ஆப்ரிக்கா நீதித்துறைக்கு வழங்குமாறும், அது பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படும் என்றும் தெரிவித்தார். ஹெவிட் தனது தண்டனைகளுக்கு எதிராக மேல் முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெவிட் பற்றி:
முதலில் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய ஹெவிட், பின் தென்னாப்பிரிக்காவுக்கு குடிபெயர்ந்து தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட ஆரம்பித்தார். இவர் பல கிராண்ட் சிலாம் மற்றும் 1960 மற்றும் 1970 ஆம் ஆண்டுக்கான இரட்டையர் ஆட்டத்தில் வெற்றி பெற்றவர். 2012 ஆம் ஆண்டு ஃபேம் சர்வதேச டென்னிசில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவர். 1974 ல் இந்திய போட்டியில் கலந்துகொள்ள மறுத்து, தென்னாபிரிக்க அணி டேவிஸ் கோப்பையை போட்டியின்றி வென்ற சமயம் ஹெவிட் அணியின் உறுப்பினராக இருந்தார்.