முகபுத்தக நிறுவனரின் கார் கலக்க்ஷென்

photo_2015-05-18_18-23-45

ஃபேஸ்புக்கில், சன்னிலியோனைவிட அதன் நிறுவனரான மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வந்த பிறந்த நாள் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்கள் கம்மிதான். ‘நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள். அப்படித்தான் மாphoto_2015-05-18_18-24-32photo_2015-05-18_18-24-49photo_2015-05-18_18-25-04photo_2015-05-18_18-23-45ர்க் ஸுக்கர்பெர்க்கும். நம்மூர் வி.ஐ.பி.க்கள் சிலர் ரொம்பவும் பந்தா பண்ணாமல் செம எளிமை பார்ட்டிகளாய் இருப்பார்கள். ரஜினிகாந்த், இப்போதும் இனோவா காரில்தான் பயணிக்கிறார்; அஜீத்குமார் ஸ்விஃப்ட் காரில்தான் வலம் வருகிறார். அதுபோல்தான் மார்க்கும். உலகின் இளம் வயதுப் பணக்காரர்களில் ஒருவரான மார்க், அமெரிக்காவில் எளிமைக்குப் பெயர் போனவர். கார்கள் விஷயத்திலும் அப்படித்தான் இருக்கிறார் மார்க். மார்க் ஸுக்கர்பெர்க்கிடம் இருக்கும் கார்கள் என்னென்ன?

அக்யூரா TSX

இது நம்மூர் ஆடி A4, A6 அளவு ஓரளவு கெத்து கொண்ட கார். லக்ஸுரி செடான் காரான இதில், 2.4 லிட்டர் 4 சிலிண்டர் இன்ஜின் இருக்கிறது. இதன் பவர் 201bhp. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட இந்த காரை மேனுவலாக ஓட்ட விரும்பினால், இதிலுள்ள பேடில் ஷிப்ட்டைப் பயன்படுத்தலாம். சேட்டிலைட் ரேடியோ, ப்ளூடூத், மசாஜ் லெதர் சீட்டுகள், 7 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் கொண்ட இந்த காரில்தான் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார் மார்க். இந்த காரின் விலை, நம்மூர் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.50 லட்சம்.

ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப்

மார்க் வாங்கிய முதல் கார் ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப். மார்க்கிடம் அதிக மார்க் வாங்கும் காரும் இதுவே! அதாவது, மார்க் ஸுக்கர்பெர்க்கின் மனம் கவர்ந்த கார் இது. ‘‘காம்பேக்ட் கார்கள்தான் எனக்குப் பிடிக்கும். சிட்டிக்குள் என் கோல்ஃபை ஓட்டுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்’’ என்று சொல்லும் மார்க் ஸுக்கர்பெர்க், தனது ஃபேஸ்புக் தலைமை அலுவலகத்துக்கும் வீட்டுக்குமான பயணத்தை இதில்தான் செலவழிக்கிறார். 2009-ம் ஆண்டிற்கான சிறந்த கார் விருது மற்றும் யூரோ குளோப் என்கேப் நிறுவனத்தின் ‘பாதுகாப்பான கார்’ போன்ற விருதுகளைப் பெற்றிருப்பதால், மார்க்கின் சாய்ஸ் கோல்ஃப்தானாம். நம்மூர் ஆல்ட்டோ மாதிரி அமெரிக்காவில் கோல்ஃப் விற்பனை சக்கைப் போடு போடுகிறதாம். இதில் ஸுக்கர்பெர்க் போன்ற வி.வி.ஐ.பி.க்கள் தங்கள் காரைப் பயன்படுத்துவது, காருக்குக் கூடுதல் விளம்பரம் என்று கருதிய ஃபோக்ஸ்வாகன் நிறுவனம், சென்ற வருடம் ஜனவரி மாதம் ஒரு டாப் எண்ட் கோல்ஃப் காரை, மார்க்கின் வீட்டுக்கே சென்று பரிசளித்திருக்கிறது.

ஹோண்டா ஃபிட்

உருவத்தில் மட்டுமல்ல; காரிலும் ஃபிட் ஆக இருக்க நினைக்கிறார் மார்க். இதுவும் காம்பேக்ட் கார்தான். ஓரளவு எம்.யு.வி. போல் இருக்கும் இதில் மேஜிக் சீட்டுகள் ஸ்பெஷல். இரண்டாவது வரிசையில் உள்ள சீட்டுகளை மடித்தால் ஒரு சைக்கிள் வைக்கும் அளவுக்கு ஃபிட் காரில் இடம் கிடைக்கிறது. இந்த மேஜிக் சீட்டுகளை மடித்து, மேலே இருக்கும் ‘மூன் ரூஃப்’பைத் திறந்து, உயரமான சில லக்கேஜ்களை வைத்துக்கொள்ளலாம் என்று விளம்பரம் செய்கிறது ஹோண்டா. 1500 சிசி, 4 சிலிண்டர் இன்ஜின், 130bhp பவர் கொண்ட இந்த கார்தான், நம்மூருக்கு ஜாஸ் காராக வரவிருக்கிறது. சின்னச் சின்ன ஃபேமிலி டூர், லக்கேஜ்கள் அதிகம் ஏற்றிச் செல்ல இதைப் பயன்படுத்துகிறார் மார்க். நம்மூர் மதிப்பில் அமெரிக்காவில் இதன் விலை ரூ.30 லட்சம்.

பகானி ஹூய்ரா

மார்க்கிடம் இருக்கும் ஒரே காஸ்ட்லி கார் பகானி ஹூய்ராதான். சூப்பர் காருக்கு ஒரு படி மேலான ஹைப்பர் கார் இது. மெர்சிடீஸ் பென்ஸ் AMG-ன் இன்ஜினைக் கொண்டிருக்கும் ஹூய்ரா, 5980 சிசியும், 12 சிலிண்டரும், 730bhp பவரும், 7 ஸ்பீடு டூயல் க்ளட்ச் கியர்பாக்ஸும் கொண்டிருக்கிறது. முதலில் ‘பகானி ஸோண்டா’ காரை ஆர்டர் செய்திருக்கிறார் மார்க் என்று அமெரிக்கப் பத்திரிகைகளில் கிசுகிசு கிளம்பியதாம். பிறகு, ‘பகானி ஹூய்ரா காரை ஆர்டர் செய்துவிட்டார்’ என்றன அதே பத்திரிகைகள். ‘மிஷின் மேக்’ அல்லாமல் ‘மேன் மேட்’ ஆக உருவாக்கப்படும் பகானி ஹூய்ரா, முழுக்க கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டிருப்பதால், இதன் எடை மிகக் குறைவுதான். ரியர் வீல் டிரைவான இது 0-100 கி.மீ-யை வெறும் 6 விநாடிகளுக்குள் தொடும் இதன் விலை கிட்டத்தட்ட 9.5 கோடி ரூபாய்.

இது தவிர, மார்க் ஸுக்கர்பெர்க், தனி விமானம் ஒன்றையும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.