பெண்கள் முன்னெற்றம்!!!!!!!! – பெண்களும் குடித்து விட்டு கார் ஓட்டுவதை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

போதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான பிரச்சாரத்தில் பெண் போலீசார் சிலரும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இரவு நேர வாகன ஓட்டிகளை சோதனையிடும் போது பெண்கள் சிலரும் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது தெரிய வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் போதையில் பெண் வழக்கறிஞர் ஒருவர் கார் ஓட்டி, மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த ஆண்டு 15,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12 பேர் மட்டுமே பெண்கள். ஆனால் இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஏப்ரல் 30 வரை மட்டும் போதையில் ஓட்டியதாக 4261 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது