புதிய சாதனை — ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது

australia

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் கோர்டன் அணைக்கட்டில் ஒரு புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுமார் 460 அடி உயரமுள்ள இந்த அணைக்கட்டின் 415வது அடி உயரத்தில் இருந்து போடப்பட்ட கூடைப்பந்து மிகச்சரியாக வலைக்குள் சென்று விழுந்தது. இது ஒரு புதிய கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ராட்டர்டாம் நகரில் உள்ள 299 அடி உயரமுள்ள யூரேமாஸ்ட் கோபுரத்தில் இருந்து வீசப்பட்டதுதான் இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ பதிவு இணையங்களில் மிக வேகமாக பகிரப்பட்டு வருகிறது