பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை,

photo_2015-05-17_23-18-23
நியூயார்க்: பார்வையற்றறோர் பயன்படுத்தும் பிரெய்லி பிரிண்டரை, குறைந்த விலையில் உருவாக்கி, 13 வயதான இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மாணவன் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா கிளாரா நகரில், 8ம் வகுப்பு படித்து வருகிறான் சுபம் பானர்ஜி. 13 வயதான பானர்ஜி, படிப்பில் படு சுட்டி. அதேசமயம், அவனுடைய தந்தை நெய்லின் உதவியுடன், கணினி தொழில் நுட்பத்திலும் ஆர்வம் காட்டி வருகிறான். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அறிவியல் திருவிழாவின்போது, பானர்ஜி கலந்து கொண்டான்.
அப்போது, பார்வையற்றோர் பயன்படுத்தம் பிரெய்லி பிரிண்டரின் விலை, 2 ஆயிரம் டாலர் (ரூ.1.27 லட்சம்) என்பதை தெரிந்து கொண்டான். இது அவனுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், தனது பல மாத உழைப்புக்கு பின்னர், பிரெய்லி பிரிண்டரை அவன் தற்போது வடிவமைத்துள்ளான். பானர்ஜியின் கண்டுபிடிப்பை பாராட்டியுள்ள, பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம், பிரெய்லி பிரிண்டர் தயாரிப்பு திட்டத்தில், அவனையும் சேர்த்துக் கொண்டுள்ளது.