நடிகர் விஜயகாந்த்தின் நண்பரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்….

கடந்த சில ஆண்டுகளாகவே இப்ராஹிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார், உடல் எடையில் பாதிக்கு மேல் இழந்தார். கடந்த சில வாரங்களாக வட பழனியில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டிருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது.
இப்ராஹிம் ராவுத்தர் உடலுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் கண்ணீர் அஞ்சலி