தேமுதிக தலைவர் விஜயகாந்த்

DMKDMDK

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 11ஆண்டு பிறகு திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று பகல் 10:53 மணிக்கு சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது கருணாநிதிக்கு விஜயகாந்த் சால்வை அணிவித்தார். பின்னர் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் எனறு இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.