டெல்லியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா

city_bus_cctv_b_13052013

துடெல்லி: டெல்லியில் முதற்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பில் 5,000 அரசு பஸ்களில் கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி, ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

டெல்லி அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் (டிடீசி) முதற் கட்டமாக 100 கோடி செலவில் 5,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான நிதி, வரும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் கூறியதாவது: டெல்லி போக்குவரத்துக் கழகம் சார்பில் 4,700 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 924 ஸ்டாண்டர்டு ரக பஸ்களின் (எல்லோ) ஆயுட்காலம் முடிந்து விட்டது. இதுத விர ஒருங்கிணைந்த பல்முனை போக்குவரத்து மாதிரி அமைப்பு (டிஐ எம் டி எஸ்) சார் பில் 1,300 கிளஸ்டர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் இந்த பஸ்களில் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 5,000 டிடீசி மற்றும் கிளஸ்டர் பஸ்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு
பஸ்சிலும் தலா 3 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுவதன் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தாழ்தள பஸ்கள், ஏசி பஸ்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். மேலும் 1,300 கிளஸ் டர் பஸ்களும் (ஆரஞ்ச்) இத்திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளன. இத் திட்டத்துக்காக வரும் பட் ஜெட்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதே போல் தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்ட 5,000 பாதுகாவலர்கள் (மார் ஷல்ஸ்) பஸ்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தற்போது ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் பணியமர்த்தப்படுவர். இது போன்ற பாதுகாவலர்களுக்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.