டிராகுலா, லார்ட் ஆப் த ரிங்ஸ் பாத்திரங்களின் மூலம் அழியா புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகர் கிறிஸ்டோபர் லீ லண்டனில் 93ஆவது வயதில் காலமானார்.

christopherlee

டிராகுலா எனும் பெயரைக் கேட்டால் இன்றைக்கும் குலை நடுங்கும் அளவிற்கு ரத்தம் குடிக்கும் காட்டேரியாக திரையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கிறிஸ்டோபர் லீ. 1950களின் பிற்பகுதியில் வெளியான படங்களில் டிராகுலாவாக ரசிகர்களை இருக்கையின் விளிம்பில் அமர வைத்தவர், ஜெம்ஸ் பாண்ட், லார்ட் ஆப் த ரிங்ஸ் படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.

கிறிஸ்டோபர் லீ என்றாலே கொடூரமான ஒரு வில்லன் எனும் எண்ணத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். உலகளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு வில்லனாக இருந்த அவர் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். கடந்த ஞாயறு அன்றே அவர் காலமான போதும் 4 நாட்களுக்கு பிறகே அந்த செய்தியை வெளியிட்டுள்ளனர் அவரது குடும்பத்தினர்.